கடந்த ஏழு வர்த்தக நாட்களாக சென்செக்ஸ் 39000-த்துக்கு மேல் வர்த்தகம் நிறைவு..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இன்று காலை சென்செக்ஸ் 39,379 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி தற்போது 39,592 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. நேற்று மாலை சென்செக்ஸ் 39,434-க்கு நிறைவடைந்தது.

 

ஆனால் இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்திலேயே சுமார் 55 புள்ளிகள் கேப் டவுனிலேயே வர்த்தகமாகத் தொடங்கியது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் புள்ளி 157 புள்ளிகள் அதிகரித்திருக்கின்றன.

அதே போல் நிஃப்டி50 இண்டெக்ஸ் காலை 11,768 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி தற்போது 11,847 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. நேற்று மாலை வர்த்தக நேர முடிவில் நிஃப்டி50 11,769 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங்கை விட இன்றைய குளோசிங் 51 புள்ளிகள் அதிகரித்திருக்கின்றன.

சென்செக்ஸ் 30 & நிஃப்டி 50

சென்செக்ஸ் 30 & நிஃப்டி 50

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 11 பங்குகள் இறக்கத்திலும், 19 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமாகும் 50 பங்குகளில் 19 பங்குகள் இறக்கத்திலும், 31 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,659 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,440 பங்குகள் ஏற்றத்திலும், 1,059 பங்குகள் இறக்கத்திலும், 160 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,659 பங்குகளில் 49 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 203 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

லாபம் & நட்டம்

லாபம் & நட்டம்

நிஃப்டி இண்டெக்ஸ்களில் Fast Moving consumer Goods என்று சொல்லப்படும் எஃப் எம் சி ஜி, ஐடி, துறை சார்ந்த பங்குகள் மட்டுமே இறக்கத்தில் வர்த்தகமாயின. மற்ற அனைத்து துறை சார்ந்த பங்குகளும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. இன்றைய வர்த்தகத்தில் யெஸ் பேங்க், ரிலையன்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி பேங்க் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின. வேதாந்தா, பவர் கிரிட் கார்ப்பரேஷன், ஜே எஸ்டபிள்யூ ஸ்டீல், சன் பார்மா, ஹிண்டால்கோ போன்ற நிறுவனப் பங்குகள் சுமார் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. பிரிட்டானியா, இந்தியாபுல்ஸ் ஹவுசிங், இன்ஃபோசிஸ், இண்டஸிந்த் பேங்க், பார்தி ஏர்டெல் போன்ற பங்குகள் சுமார் இறக்கத்தில் வர்த்தகமாயின.

உலக சந்தைகள்
 

உலக சந்தைகள்

ஜூன் 25, 2019-ல் அமெரிக்க சந்தையான நாஸ்டாக் -1.51% வர்த்தகமானது. அதோடு இன்று ஜூன் 26, 2019 ஐரோப்பிய சந்தைகளில் லண்டனின் எஃப்.டி.எஃப்.இ 0.04%, பிரான்சின் சி ஏ சி 0.10% , ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 0.35% வர்த்தகமாகி வருகின்றன. ஜூன் 26, 2019-ல் ஆசிய பங்குச் சந்தைகளில் பெரும்பாலான சந்தைகள் இன்று இறக்கத்தில் வர்த்தகமாயின. அதிகபட்சமாக தைவான் நாட்டின் தைவான் வெயிடெட் -0.51% இறக்கத்தில் வர்த்தகமாயின. ஹாங்காங்கின் ஹேங்செங், தென் கொரியாவின் கோஸ்பி, இந்தோனேசியாவின் எஸ் இ டி காம்போசைட் போன்ற சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின.

மாய எண்

மாய எண்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 69.15 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. அதே போல ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெயின் விலை 65.10 டாலராக வர்த்தகமாகிறது. ஏற்கனவே சென்செக்ஸுக்கு 39,000 ஒரு மாய எண். அதை கடப்பது கடினம் என பல முறை சொல்லி இருந்தோம். ஆனால் இப்போது அந்த மாய எண்ணில் ஒட்டிய மேனிக்கே வர்த்தகமாகி வருகிறது சென்செக்ஸ். கடந்த ஏழு நாட்களாக தொடர்ந்து 39,000 புள்ளிகளுக்கு மேலேயே வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. ஏறக்குறைய கடந்த 24 வர்த்தக நாட்களில் ஜூன் 17, 2019 அன்ரு மடும் தான் சென்செக்ஸ் 38,960000 புள்ளிகளுக்கு கீழ் வர்த்தகம் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

sensex closed above 39000 mark for the last 7 trading days

sensex closed above 39000 mark for the last 7 trading days and except june 17, 2019 it closed above 39000 for the last 22 trading days consecutively
Story first published: Wednesday, June 26, 2019, 18:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X