மும்பை: கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் இந்திய பங்கு சந்தைகள், இன்றும் ஏற்றத்திலேயே முடிவடைந்தன. இந்த நிலையில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 221 புள்ளிகள் ஏற்றம் கண்டு 40,469 ஆக முடிவடைந்துள்ளது.
இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 48 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 11,966 ஆக முடிவடைந்துள்ளது.

இதே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 70.99 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
கடந்த சில தினங்களாகவே 40,000 மேல் நிலை கொண்டிருக்கும் நிலையில், இன்று புதிய உச்சமான 40,606-ஐ தொட்டு முடிவில் சற்று இறங்கி 40,469-ல் முடிவடைந்தது.
இதே சர்வதேச சந்தைகளும் சற்று ஏற்றித்திலேயே உள்ளன, ஐரோப்பிய சந்தையான எஃப்.டி.எஸ்.இ மட்டும் சற்று இறக்கத்தில் இருக்கும் நிலையில் உள்ளது.
இதே யெஸ் பேங்க், இன்ஃபோசிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ உள்ளிட்ட வங்கிகள் நல்ல ஏற்றத்திலும், இதே டைட்டன் நிறுவனம், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பங்குகள் படு சரிவிலும் காணப்படுகிறது.
இதே நிஃப்டி குறியீட்டில் உள்ள சிப்லா, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இன்ஃபோசிஸ், ஹெச்.டி.எஃப்.சி, இந்தஸ்இந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டைட்டன் நிறுவனம், பார்தி ஏர்டெல், ஓ.என்.ஜி.சி, மாருதி சுசூகி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் முடிவடைந்துள்ளன.
இதே சென்செக்ஸ் குறீயீட்டில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இன்ஃபோசிஸ், ஹெச்.டி.எஃப்.சி, இந்தஸ்இந்த் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ், பஜாக் ஃபைனான்ஸ், ஓ.என்.ஜி..சி மற்றும் மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் முடிவடைந்துள்ளது.
இதே சிப்லா செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அதன் நிகரலாபம் 25 சதவிகிதம் ஏற்றத்துடன் முடிவடைந்த நிலையில், இந்த நிறுவனத்தின் பங்கு விலை 13 ரூபாய் ஏற்றம் கண்டு, 480 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
இதே கோத்ரேஜ் நிறுவனம் அதன் நிகரலாபம் 28.36% குறைந்து, 413 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 20 ரூபாய் ஏற்றம் கண்டு 741 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications