கண்ட ஏற்றம் எல்லாம் காணாமல் போனதே..! வருத்தத்தில் முதலீட்டாளர்கள்..!

இந்தியப் பொருளாதார வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் ஜிடிபி வளர்ச்சி எண்கள் இன்று மாலை வெளியாக இருக்கின்றன. இந்த செப்டம்பர் 2019 காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 5 சதவிகிதத்துக்கும் குறைவாகவே வர வாய்ப்பு இருப்பதாக பல தரகு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் கணித்து இருக்கின்றன. இந்த ஒரு மேக்ரோ பொருளாதார செய்தியே இன்று ஒட்டு மொத்த சந்தையையும் 41,000 புள்ளிகளுக்குக் கீழ் கொண்டு வந்திருக்கிறது.

சந்தையில் முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும், இந்திய சந்தை இன்னும் பல உயரங்களை விரைவில் தொடும் என்கிற பாசிட்டிவ் சென்டிமென்ட் உடன் இருப்பதை உணர முடிவதாக நேற்றே சொல்லி இருந்தோம். அந்த சென்டிமென்ட் இன்று சந்தையில் இல்லை.

கண்ட ஏற்றம் எல்லாம் காணாமல் போனதே..! வருத்தத்தில் முதலீட்டாளர்கள்..!

அதோடு சென்செக்ஸ் டே சார்ட் பேட்டனில் 28 நவம்பர் 2019 அன்றைக்கு, ஒரு மிக சரியான ஹேமர் பேட்டன் உருவாகி இருக்கிறது. அந்த பேட்டன் உருவானதால், 41,000 ஒரு வலுவான சப்போர்ட்டாகத் தெரியவில்லை எனச் சொல்லி இருந்தோம். சொன்னது போலவே 41,000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் இன்று நிறைவடையவில்லை.

இன்று வெளியாக இருக்கும் ஜிடிபி தரவுகள் மற்றும் பொருளாதார செய்திகள் அடிப்படையில் தான், அடுத்த வார வர்த்தகத்தைக் கணிக்க முடியும். அதோடு சென்செக்ஸ் இன்று திடீரென 40,650 புள்ளிகளைச் சப்போட் எடுத்து வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. எனவே ஏற்றம் காண்பது சிரமம் தான்.

ஒருவேளை சந்தை அடுத்த வாரத்திலும், ஏதாவது நல்ல செய்தி வந்து ஏற்றம் கண்டால், 41,000 முதல் ரெசிஸ்டென்ஸாக இருக்கும். 41,125 அடுத்த வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கும்.

இன்று வெளியாக இருக்கும் ஜிடிபி தரவுகள் பெரும்பாலும் நெகட்டிவ்வாகவே வர வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். எனவே சந்தையில் போதுமான நெகட்டிவ் செய்திகள் இருக்கும் என்பதால், சந்தை இறக்கத்தை உணர முடிகிறது. 40,500 புள்ளிகளை முதல் சப்போட்டாக வைத்துக் கொள்வோம். 40,500 புள்ளிகளை வலுவான சப்போட்டாக வைத்துக் கொள்வோம்.

நேற்று மாலை சென்செக்ஸ் 41,130 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 41,138 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 40,793 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 336 புள்ளிகள் இறக்கம் கண்டு இருக்கிறது.

இன்று காலை நிஃப்டி 12,146 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 12,056 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 95 புள்ளி இறக்கம் கண்டு இருக்கிறது.

சென்செக்ஸின் 30 பங்குகளில் 03 பங்குகள் ஏற்றத்திலும், 27 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,751 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,220 பங்குகள் ஏற்றத்திலும், 1,341 பங்குகள் இறக்கத்திலும், 190 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,680 பங்குகளில் 48 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 132 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

ஏர்டெல், அதானி போர்ட்ஸ், பார்தி இன்ஃப்ராடெல், என் டி பி சி, ஹெச் டி எஃப் சி பேங்க் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஜி எண்டர்டெயின்மெண்ட், யெஸ் பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலிவர், எஸ்பிஐ, டாக்டர் ரெட்டீ லேப்ஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+