முட்டு கொடுக்கும் மோடி சக்தி..! புதிய உச்சத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி..!

மும்பை: இன்று காலை சென்செக்ஸ் 39,536 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி தற்போது 39,683 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. நேற்று மாலை சென்செக்ஸ் 39,434-க்கு நிறைவடைந்தது. ஆனால் இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்திலேயே சுமார் 100 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் புள்ளி 248 புள்ளிகள் அதிகரித்திருக்கின்றன.

அதே போல் நிஃப்டி50 இண்டெக்ஸ் காலை 11,855 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி தற்போது 11,924 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. நேற்று மாலை வர்த்தக நேர முடிவில் நிஃப்டி50 11,844 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. அப்படியே வர்த்தகமாக நிஃப்டி50 கொஞ்சம் கூடுதல் ஏற்றம் கண்டு 11,924 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறை வடைந்திருக்கிறது. நேற்றைய குளோசிங்கை விட இன்றைய குளோசிங் 80 புள்ளிகள் அதிகரித்திருக்கின்றன. அதோடு வாழ்நாள் புதிய உச்சத்தில் சென்செக்ஸும், நிஃப்டியும் நிறைவடைந்திருக்கின்றன.

முட்டு கொடுக்கும் மோடி சக்தி..! புதிய உச்சத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி..!

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 13 பங்குகள் இறக்கத்திலும், 17 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமாகும் 50 பங்குகளில் 18 பங்குகள் இறக்கத்திலும், 31 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,766 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,790 பங்குகள் ஏற்றத்திலும், 795 பங்குகள் இறக்கத்திலும், 181 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,766 பங்குகளில் 77 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 91 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

நிஃப்டியில் ஐடி, மீடியா, பார்மா போன்ற துறை சார்ந்த இண்டெக்ஸ்கள் மட்டும் இறக்கத்தில் வர்த்தகமாயின. மற்ற அனைத்து துறை சார்ந்த பங்குகளும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. இன்றைய வர்த்தகத்தில் எஸ்பிஐ, ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், லார்சன் அண்ட் டியூப்ரோ, யெஸ் பேங்க் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.

டாடா ஸ்டீல், யெஸ் பேங்க், ஐ ஓ சி, லார்சன் அண்ட் டியூப்ரோ, என் டி பிசி போன்ற நிறுவனப் பங்குகள் சுமார் 3.50 சதவிகித விலை ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஜி எண்டர்டெயின்மெண்ட், இண்டஸ் இந்த் பேங்க், ரிலையன்ஸ், டெக் மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ் போன்ற பங்குகள் சுமார் 3 சதவிகித இறக்கத்தில் வர்த்தகமாயின. மே 24, 2019-ல் அமெரிக்க சந்தையான நாஸ்டாக் 0.11% வர்த்தகமானது. அதோடு இன்று ஐரோப்பிய சந்தைகளில் லண்டனின் எஃப்.டி.எஃப்.இ (மே 24, 2019) 0.65%, பிரான்சின் சி ஏ சி (மே 27, 2019) 0.38% , ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் (மே 27, 2019) 0.58% வர்த்தகமாகி வருகின்றன.

மே 27, 2019-ல் ஆசிய பங்குச் சந்தைகளில் பெரும்பாலான சந்தைகள் இன்று ஏற்றத்தில் வர்த்தகமாயின. அதிகபட்சமாக சீனாவின் ஷாங்காய் காம்போசைட் -1.38% ஏற்றத்தில் வர்த்தகமாயின. சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி, ஹாங்காங்கின் ஹேங் செங் , தென் கொரியாவின் கோஸ்பி போன்ற சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 69.50 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. அதே போல ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெயின் விலை 67.92 டாலராக வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+