கரடியின் கிடுக்கிப்பிடி.. சரிவில் தத்தளிக்கும் சென்செக்ஸ்..இந்த ஒரு துறை மட்டும் சூப்பர் வளர்ச்சி..!

பெரும்பாலான ஆசியச் சந்தைகளுக்கு லாபகரமான திருப்பத்தை ஏற்படுத்திய செவ்வாய்க்கிழமை வர்த்தகம் இந்திய பங்குச் சந்தைக்கு பொய்த்தது. 30-பங்கு கொண்ட சென்செக்ஸ் 166 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து இன்றைய வர்த்தகத்தை முடித்தது. இன்றைய வர்த்தக துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 900 புள்ளிகள் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கை கொடுத்தது. ஆனாஸ் முதல் பகுதியில் கிடைத்த நம்பிக்கை தற்காலிக நிவாரணமாக மாறி வர்த்தக முடிவில் சரிய துவங்கியது.

இந்தியப் பங்குச்சந்தையில் இருக்கும் நிறுவனங்களின் மதிப்பீட்டு பிரச்சனை, உலகளாவிய நிச்சயமற்ற நிலைகள், யென் வர்த்தகம், அமெரிக்கப் பொருளாதார மந்த நிலையில், முன்னணி பொருளாதார வல்லுனர்களின் கருத்துக்கள் ஆகியவை இந்திய சந்தையை கலவையாக பாதித்துள்ளது.. இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி ரியல் எஸ்டேட், மெட்டல், மீடியா, ஐடி, எப்எம்சிஜி ஆகியவை உயர்வுடன் முடிந்துள்ளது. இதில் அதிகப்படியாக நிஃப்டி ரியல் எஸ்டேட் குறியீடு 0.84 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.

கரடியின் கிடுக்கிப்பிடி.. சரிவில் தத்தளிக்கும் சென்செக்ஸ்..இந்த ஒரு துறை மட்டும் சூப்பர் வளர்ச்சி..!


இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 0.21% சரிந்து 78,593 புள்ளிகளில் முடிந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 0.26% சரிந்து 23,992ல் முடிந்தது. சென்செக்ஸ் குறியீட்டில் மஹிந்திரா, HDFC வங்கி, பாரதி ஏர்டெல், SBI, ICICI வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் பஜாஜ் பைனான்சியல் ஆகியவை அதிகப்படியான சரிவை எதிர்கொண்ட நிலையில், JSW ஸ்டீல், டெக் மஹிந்திரா, எல்&டி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், HUL மற்றும் HCL டெக் ஆகியவை உயர்வுடன் முடிந்தன.

துறை வாரியாக பார்க்கும் போது, நிஃப்டி ரியல் எஸ்டேட், மெட்டல், மீடியா, ஐடி, எப்எம்சிஜி ஆகியவை உயர்வுடன் முடிந்த நிலையில், நிஃப்டி ஆட்டோ, சுகாதாரம், நுகர்வோர் பொருட்கள் மற்றும் எண்ணெய் & வாயு ஆகியவை பெரும் சரிவை சந்தித்தது. நிஃப்டி மிட் கேப் 100 மற்றும் நிஃப்டி ஸ்மால் கேப் 100 குறியீடுகள் முறையே 0.4% மற்றும் 0.6% சரிந்தன.

மேலும் இன்றைய வர்த்தகத்தில் இந்தியா VIX குறியீடு 8% குறைந்து 18.74ல் முடிந்தது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயமாகும். பங்களாதேஷ் அரசியல் நெருக்கடி இந்தியாவிலிருந்து டெக்ஸ்டைல் ஏற்றுமதியை அதிகரிக்கும் என்று முதலீட்டாளர்கள் நம்பும் காரணத்தால் கோகில்தாஸ் எக்ஸ்போர்ட்ஸ், சென்சூரி என்கா மற்றும் எஸ்பி அப்பரல்ஸ் போன்ற டெக்ஸ்டைல் பங்குகள் 13-20% வரை உயர்ந்து முடிந்தன.

இதன் மூலம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் சந்தை மூலதனம் வர்த்தக முடிவில் ரூ.1.57 லட்சம் கோடி குறைந்து ரூ.440.27 லட்சம் கோடியாக குறைந்தது. மேலும் இன்றைய BSE-யில் சுமார் 2,344 பங்குகள் வீழ்ச்சியடைந்தன, 1,592 உயர்ந்தன மற்றும் 92 மாறாமல் நேற்றைய நிலையிலேயே இருந்தன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+