செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் தொடர்ந்து பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும், இன்போசிஸ் மற்றும் எச்டிஎப்சி வங்கியின் காலாண்டு முடிவுகள் வெளியாவதன் எதிரொலியாக இன்று உயர்வான நிலையில் வர்த்தகம் முடிந்தது.
இன்று மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து லாபத்தில் முடிந்தது. மேலும் என்எஸ்ஈ-யின் PE குறியீட்டு அளவு 21.3 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 5 வருடத்தின் சாரசரி அளவான 16.8 விட அதிகமானது.

மும்பை பங்குச்சந்தையின் இன்று வர்த்தகம் துவக்கம் முதல் உயர்வுடனே துவங்கி அதிகப்படியாக 150 புள்ளிகள் வரை உயர்ந்து காணப்பட்டது. இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 100.62 புள்ளிகள் உயர்ந்து 32,607.34 புள்ளிகளை அடைந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை போலப் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த நிஃப்டி குறியீடு 22.85 புள்ளிகள் உயர்வுடன் 10,207.70 புள்ளிகளை அடைந்தது இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications