அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அதிகாரி ஜெரோம் பேவல், அமெரிக்காவின் பொருளாதாரம் டிசம்பர் மாதத்தில் இருந்து வலிமை அடைந்து வருகிறது, அதேபோல் பணவீக்கமும் இலக்கை அடையும் பாதையில் உள்ளது. இதனால் வட்டி உயர்த்தும் வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது எனக் கூறினார்.
இதன் எதிரொலியாக இன்று ஆசிய சந்தை வர்த்தகம் மந்தமாகக் காணப்பட்டது.
பிஎன்பி வங்கி
பிஎன்பி வங்கியில் நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்ஸி ஆகிய செய்த 11,300 கோடி ரூபாய் மோசடியுடன் கூடுதலாக 1,300 கோடி ரூபாய் அளவிலான மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் பிஎன்பி வங்கி மட்டும் அல்லாமல் பிற வங்கிகளும் சரிவை சந்தித்துள்ளது.
2 பில்லியன் டாலர்
இந்த அறிவிப்புக்குப் பின் நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்ஸி ஆகியோர் செய்த மோசடியின் அளவு 2 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது.
சரிவு
இன்றைய வர்த்தகத்தில் பங்குகள், ரூபாய் மதிப்பு, பத்திர மதிப்பு என அனைத்தும் சரிவை சந்தித்துள்ள காரணத்தால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டை வெளியேற்றினர்.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
புதன்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 162.35 புள்ளிகள் சரிந்து 34,184.04 புள்ளிகளில் உள்ளது.
நிஃப்டி குறியீடு 61.45 புள்ளிகள் சரிந்து 10,492.85 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications