ஐரோப்பிய முதலீட்டாளர்களால் சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி..!
நவம்பர் மாதத்திற்கான பணவீக்கம் மற்றும் அக்டோபர் மாதத்திற்கான தொழிற்துறை உற்பத்தி அளவுகள் நேற்று வெளியான காரணத்தால் இன்று காலை வர்த்தகம் துவங்கும் முதலே மந்தமான வர்த்தகம் பதிவு செய்தது.

ஆனால் சில மணிநேரத்தில் முதலீட்டாளர்களின் பங்குகளை அதிகளவில் வாங்கிய காரணத்தால் உயர்வடையத் துவங்கியது. ஆனால் ஐரோப்பிய சந்தை துவக்கத்தில் முக்கியத் துறைகளில் பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட காரணத்தால் 145 புள்ளிகள் வரையில் சரிந்தது.
இதன்படி இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 174.95 புள்ளிகள் வரையில் சரிந்து 33,053.04 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 47.20 புள்ளிகள் சரிந்து 10,192.95 புள்ளிகளை அடைந்தது.


Click it and Unblock the Notifications