சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2 வருட உச்சத்தை அடைந்துள்ளதன் காரணமாக இன்று மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான சரிவை சந்தித்தது.
கடந்த 3 வர்த்தக நாட்களாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு தொடர்ந்து உயர்வான நிலையில் இருந்தது, ஆனால் கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாகப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டைக் கச்சா எண்ணெய் சந்தையில் மாற்றியுள்ளனர்.

இதன் காரணமாக இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 227.80 புள்ளிகள் குறைந்து 33,227.99 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 82.10 புள்ளிகள் குறைந்து 10,240.15 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் கொண்ட பட்டியலில் டாக்டர் ரெட்டி, அதானி போர்ட்ஸ், ஓஎன்ஜிசி, லுபின், இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் கணிசமான வர்த்தகத்தை அடைந்தது.


Click it and Unblock the Notifications