டாடா டெலிசர்வீசஸ் மற்றும் ஏர்டெல் மத்தியிலான வர்த்தகப் பரிமாற்ற ஒப்பந்தம் மூலம் ஏர்டெல், ஏர்டெல் இன்பரா, டாடா டெலிசர்வீசஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு மதிப்பு இன்று அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இன்று காலாண்டு முடிவுகளை வெளியிடும் காரணத்தால் அதிகளவிலான முதலீடு குவிந்தது. இதன் மூலம் நிஃப்டி குறியீடு இன்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை
வியாழக்கிழமை மாலையில் சந்தை கணிப்புகளை உடைத்தெறிந்து வந்த டிசிஎஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் முதலீட்டாளர்கள் மகிழ்வித்த நிலையில், இன்று காலை வர்த்தகம் உயர்வுடனே துவங்கியது.
100 புள்ளிகள்
டிசிஎஸ் முடிவுகள் மற்றும் இன்று வெளியாகும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முடிவுகளை எதிர்பார்த்து முதலீட்டாளர் அதிகளவிலான முதலீடு செய்து 100 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது.
இந்த உயர்வு டெலிகாம் நிறுவனங்களின் சாதகமான வர்த்தகச் சூழ்நிலையில் சென்செக்ஸ் தொடர்ந்து உயர்வடைந்து வந்தது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 250.47 புள்ளிகள் உயர்ந்து 32,432.69 புள்ளிகளை அடைந்துள்ளது.
நிஃப்டி குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டை போலவே தொடர் உயர்வைச் சந்தித்து வந்த நிஃப்டி குறியீடு ஆசிய சந்தையின் சாதகமான சூழ்நிலையில் இன்று புதிய உச்சத்தை அடைந்தது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் நிஃப்டி குறியீடு 71.05 புள்ளிகள் உயர்வில் 10,.167.45 புள்ளிகளை அடைந்தது.
புதிய உச்சமாக நிஃப்டி 10,190 புள்ளிகளை அடைந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications