ஆக்டோபர் மாதத்திற்கான பணவீக்கம் இன்று மாலை வெளியாகும் நிலையில், சந்தைக் கணிப்புகள் அனைத்தும் செப்டம்பர் மாதத்தை விடவும் அதிகமாக இருக்கும் எனக் கூறி வருகிறது.
இதனுடன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் பங்குச்சந்தை முதலீட்டாளர்களை அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்யத் தூண்டியுள்ளது.
கச்சா எண்ணெய்
சவுதி மற்றும் வளைகுடா பகுதியில் நிலவும் பிரச்சனைகளில் பல்வேறு காரணங்களுக்காக அடுத்தச் சில மாதங்களுக்குக் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்வான விலையிலேயே இருக்கும் என உறுதியாகத் தெரியும் நிலையில், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் தற்போது கச்சா எண்ணெய் சந்தைபக்கம் திரும்பியுள்ளனர்.
இதன் எதிரொலியாகவே மும்பை பங்குச்சந்தையில் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது.
பணவீக்கம்
செப்டபம்ர் மாதத்திற்கான நுகர்வோர் விலை பணவீக்கம் 3.28 சதவீதமாக இருந்த நிலையில் அக்டோபர் மாதம் இதன் அளவீடு 3.46 சதவீதமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை பங்குச்சந்தை
இன்று காலை வர்த்தகம் துவக்கும் முதல் தொடர்ந்து வர்த்தகச் சரிவிலேயே இருந்த நிலையில் வர்த்தக முடிவில் 281 புள்ளிகள் வரையில் சரிந்து 33,033.56 புள்ளிகளை அடைந்துள்ளது
நிஃப்டி
இன்றைய வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடும் 96.80 புள்ளிகள் குறைந்து 10,224.95 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
மும்பை பங்குச்சந்தையில் டாப் 30 நிறுவனப் பங்குகளில் டிசிஎஸ், மஹிந்திரா, சன் பார்மா, பவர் கிரின்டு, கோட்டாக் மஹிந்திரா வங்கி, பவர் கிரின்டு, என்டிபிசி ஆகிய நிறுவனங்கள் லாபத்தை அடைந்துள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications