பட்ஜெட்டிற்குப் பிறகு ஒன்றை வாரமாகச் சரிந்து காணப்பட்ட இந்திய பங்கு சந்தை வாரத்தின் முதல் சந்தை நாளான இன்று உயர்வுடன் முடிவடைந்துள்ளது. ஆசிய மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கிக் குவித்ததே இதற்குக் காரணம் ஆகும்.
மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 294.71 புள்ளிகள் என 0.87 சதவீதம் உயர்ந்து 34,300.47 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது. அதே நேரம் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 0.81% என 84.80 புள்ளிகள் உயர்ந்து 10,539.75 புள்ளிகளாகத் திங்கட்கிழமை வர்த்தகத்தினை முடித்துக்கொண்டது.

மும்பை பங்குச் சந்தை குறியீடுகளைப் பெருத்தவரையில் பவர், ரியல் எஸ்டேட், பயன்பாடுகள் மற்றும் மூலதன பொருட்கள் துறை சார்ந்து பங்குகள் அதிக லாபம் அளித்துள்ளன. அதே நேரம் ஐடி மற்றும் டேக் நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.
டாடா ஸ்டீல், இண்டஸ்இண்ட் வங்கி, யெஸ் வங்கி மற்றும் பவர் கிரிடு நிறுவனப் பங்குகள் இன்று அதிக லாபம் அளித்தன. எஸ்பிஐ, இன்ஃபோசிஸ், மகேந்திரா & மகேந்திரா மற்றும் ஐடிசி நிறுவனப் பங்குகள் நட்டம் அளித்தன.
மும்பை பங்கு சந்தையில் மிட் கேப் பங்குகள் 1.31 சதவீதமும், ஸ்மால் கேப் பங்குகள் 1.60 சதவீதம் உயர்ந்துள்ளன. சிவ ராத்திரியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே சந்தை நிலவரம் புதன்கிழமை எப்படி இருக்கும் என்று காத்திருப்போம்.


Click it and Unblock the Notifications