மும்பை பங்குச்சந்தையில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து முதலீடும், வர்த்தகமும் குறைந்து வரும் நிலையில் நேற்று ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் பணவீக்கம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில் அமெரிக்காவும் தனது வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்த சூழ்நிலைகள் முழுமையாகத் தெரியாத நிலையில், இன்றைய வர்த்தகத்தில் ஆசிய சந்தை அதிகளவிலான பாதிப்பை சந்தித்தது.

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அதிகளவிலான முதலீட்டின் காரணமாகச் சென்செக்ஸ் குறியீடு இன்று 400 புள்ளிகள் வரையில் உயர்ந்து காணப்பட்டது.
வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 352.03 புள்ளிகள் வரையில் உயர்ந்து 32,949.21 புள்ளிகளை அடைந்தது. மேலும் நிஃப்டி குறியீடு 122.60 புள்ளிகள் உயர்ந்து 10,166.70 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications