மத்திய அரசின் அறிவிப்பால் சென்செக்ஸ் குறியீடு 26,000 புள்ளிகள் என்ற வலிமையான நிலையில் 25,765 புள்ளிகளுக்கு குறைந்துள்ளது.
அமெரிக்க, ஆசிய சந்தைகளின் பாதிப்புக்கு நடுவே மத்திய அரசு அறிவித்துள்ள 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடை பங்குச்சந்தை வர்த்தகத்தைக் கடந்த 6 நாட்களாகத் தொடர் சரிவிலேயே வைத்துள்ளது.
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்த காரணத்தால் சென்செக்ஸ் குறியீடு 400 புள்ளிகள் வரை சரிந்து 26000 புள்ளிகள் என்ற நிலையை இழந்தது.

வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு தொடர் சரிவில் தத்தளித்தது. இதன் காரணமாக வர்த்தக முடிவில் 385.10 புள்ளிகள் சரிந்து 25,765.14 புள்ளிகளை அடைந்துள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் தொடர் சரிவு பாதையில் 145.00 புள்ளிகளை இழந்து 7,929.10 புள்ளிகளை எட்டியது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் ரியல் எஸ்டேட், நிதியியல், வங்கி, ஆட்டோமொபைல்ஸ், நுகர்வோர், மெட்டல், பவர் ஹெல்த்கேர் பிரிவின் பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications