மந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை..!
அமெரிக்கப் பெடரல் வங்கியின் நாணய கொள்கை முடிவுகளை எதிர்நோக்கிய இன்று ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தையில் வர்த்தகம் மந்தமாக இருந்தது. இதன் வாயிலாக இன்று மும்பை பங்குச்சந்தையிலும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு சரிவை தழுவியது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 73.28 புள்ளிகள் சரிந்து 35,103.14 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 38.40 புள்ளிகள் சரிந்து 10,679.65 புள்ளிகளை அடைந்தது.

வியாழக்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் சன் பார்மா, என்டிபிசி, டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகியவை கணிசமான உயர்வை சந்தித்தது.
விப்ரோ, கோட்டாக் மஹிந்திரா, ஏசியன் பெயின்ட்ஸ், எல் அண்ட் டி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், கோல் இந்தியா ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.


Click it and Unblock the Notifications