அமெரிக்க அரசு 2018ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர்ப் பெடரல் ரிசரவ் தனது வட்டியை உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எவ்விதமான மாற்றமும் அறிவிக்கவில்லை. இதனால் உலகச் சந்தைகளில் முதலீட்டாளர்கள் கடன் சந்தையில் முதலீடு செய்வதைக் காட்டிலும் பங்குச்சந்தையில் அதிகமாக முதலீடு செய்து வருகிறனர்.
இதன் எதிரொலியாகவே நேற்றைய வர்த்தகத்தில் 30,750 புள்ளிகளை அடைந்தது சென்செக்ஸ்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்திலும் உயர்வுடன் துவங்கிய மும்பை பங்குச்சந்தை அன்னிய முதலீட்டாளர்களின் அதிகப்படியான முதலீட்டில் 31,000 புள்ளிகள் புதிய உச்சத்தை அடைந்தது சென்செக்ஸ்.
என்ன காரணம்..?
அமெரிக்காவில் வட்டி உயர்வு குறித்து முடிவுகள் உலகச் சந்தைகளுக்குச் சாதகமாக அமைந்த நிலையில், இந்தியாவில் ஜிஎஸ்டி, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பல பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகள் விலை குறைந்தது நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
இதனுடன் முன்னணி நிறுவனங்கள் லாபகரமான காலாண்டு மற்றும் வருடாந்திர முடிவுகளை வெளியிட்டு வருவதால் முதலீட்டாளர்களை அதிகளவில் இந்திய சந்தை ஈர்த்துள்ளது.
ஜூன் ஆர்டர்கள்
மேலும் இன்று ஜூன் மாத ஆர்டர்கள் வெளியான காரணத்தால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் உள்நாட்டு முதலீட்டாளர்களும் அதிகளவில் முதலீடு செய்துள்ளனர்.
மும்பை பங்குச்சந்தை
வியாழக்கிழமை வர்த்தகச் சந்தையில் 30,750 புள்ளிகள் என்ற மிகப்பெரிய உச்சத்தை அடைந்த நிலையில் இன்று தொடர் முதலீட்டின் மூலம் நிலையான வர்த்தகத்தைப் பெற்றது சென்செக்ஸ் குறியீடு.
சென்செக்ஸ்
ஆசிய சந்தை, ரூபாய் மதிப்பு, கச்சா எண்ணெய் உற்பத்தி, மோடியின் 3 வருட ஆட்சி, பொருளாதாரத்திற்குப் பிரகாசமான வளர்ச்சி வாய்ப்புகள், பருவமழை ஆகிய அனைத்தும் இந்திய சந்தைக்குச் சாதகமான இருக்கும் நிலையில் சென்செக்ஸ் குறியீடு இன்று 31,000 புள்ளிகளைத் தாண்டியது.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 278.18 புள்ளிகள் உயர்ந்து 31,028.21 புள்ளிகளை அடைந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் இன்று நிலையான வர்த்தக உயர்வில் 85.35 புள்ளிகள் உயர்ந்து 9,595.10 புள்ளிகளை அடைந்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications