ஐடி நிறுவனங்களால் புதிய உச்சத்தை தொட்ட சென்செக்ஸ்..!
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களான இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்களின் வளர்ச்சியால் புதிய முதலீடுகளின் அளவு அதிகரித்து சென்செக்ஸ் குறியீடு இன்று புதிய உச்சத்தை தொட்டது.
இதன் காரணமாக இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே 100 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 184.02 புள்ளிகள் உயர்ந்து 33,940.30 புள்ளிகள் வரையில் உயர்ந்துள்ளது, மேலும் நிஃப்டி குறியீடு 52.70 புள்ளிகள் உயர்ந்து 10,493.00 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஒஎன்ஜிசி, டிசிஎஸ், இன்போசிஸ், பஜாஜ் ஆட்டோ, விப்ரோ, எஸ்பிஐ வங்கி ஆகியவை அதிகளவிலான வளர்ச்சியை அடைந்தது.


Click it and Unblock the Notifications