ஆசிய சந்தையின் வலிமையான வர்த்தகச் சூழ்நிலையில் எவ்விதமான பாதிப்புகளுக்கும் இல்லாமல் வர்த்தகத்தைத் துவங்கிய மும்பை பங்குச்சந்தைக்கு இன்று ஜாக்பாட் என்றே சொல்ல வேண்டும்.
தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த சென்செக்ஸ் கடந்த இரண்டு வர்த்தக நாட்களில் சுமார் 269.33 புள்ளிகளை இழந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த நிலையில், இன்று ஓரே நாள் வர்த்தகத்தில் மட்டும் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 460 புள்ளிகள் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது.
மும்பை பங்குச்சந்தை
ஆசிய சந்தையில் அனைத்து வர்த்தகச் சந்தைகளும் சிறப்பான வர்த்தகத்தை அடைந்த காரணத்தினால் இன்று வர்த்தகத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை உயர்வுடன் துவங்கியது.
இது பன்னாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க ஏதுவாக அமைந்தது.
அமெரிக்கப் பெடரல் வங்கி
செவ்வாய்க்கிழமை அமெரிக்க அரசு 2018ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை அறிவித்த நிலையில் இந்நாட்டு மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி உயர்விற்கான ஆலோசனை கூட்டத்தை நடத்தியது.
இதில் அடுத்த 2 மாதங்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை. இது ஆசிய சந்தைக்கும் இந்திய சந்தைக்கும் மிகவும் சாதகமாக அமைந்தது.
ஆர்டர்கள்
மேலும் இன்று மே மாதத்திற்கான ஆர்டர்கள் முடிவடையும் காரணத்தால் இந்திய சந்தையில் புதிய முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்தனர். இதனைத் தொடர்ந்து உள்நாட்டுச் சந்தையிலும் வெளிநாட்டுச் சந்தையில் இருந்தும் அதிகப்படியான முதலீடு இந்திய பங்குச்சந்தையில் குவிந்தது.
இதன் காரணமாக மதியம் 2 மணிக்கு மேல் சென்செக்ஸ் குறியீடு மளமளவென 460 புள்ளிகள் வரை உயர்ந்தது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 448.39 புள்ளிகள் உயர்ந்து 30,750.03 புள்ளிகளை அடைந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே தொடர்ந்து வர்த்தக உயர்வை சந்தித்த நிஃப்டி குறியீடு இன்று வர்த்தக முடிவில் சுமார் 149.20 புள்ளிகள் வரை உயர்ந்து 9,509.75 புள்ளிகளை அடைந்தது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications