ரிசர்வ் வங்கியால் பங்குச்சந்தை வர்த்தகம் மந்தம்..!
ரிசர்வ் வங்கியால் பங்குச்சந்தை வர்த்தகம் மந்தம்..!
செவ்வாய்க்கிழமை ராம நவமியை முன்னிட்டு பங்குச்சந்தை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று சிறப்பான வர்த்தகம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட முதலீட்டாளர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
ரிசர்வ் வங்கியின் இருமாத நாணய கொள்கையின் 2 நாள் கூட்டம் இன்று துவங்கிய நிலையில், வட்டி குறைப்பு ஏதேனும் இருக்குமா என்ற சந்தேகத்தில் முதலீட்டாளர்கள் இன்று பங்குச்சந்தையில் மிகவும் குறைந்த அளவிலான முதலீட்டை மட்டுமே செய்துள்ளனர்.

இதன் எதிரொலியாகப் புதன்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 64.02 புள்ளிகள் உயர்ந்து 29,974.24 புள்ளிகளை அடைந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடு 27.30 புள்ளிகள் உயர்ந்து 9,265.15 புள்ளிகள் அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications