சர்வதேச சந்தையின் மந்தமான வர்த்தகத்தின் காரணமாக இன்று ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் இதர முன்னணி வங்கி பங்குகள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.
ஆசிய சந்தை
இதுமட்டும் அல்லாமல் அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட நிலையற்ற வர்த்தகச் சூழ்நிலையின் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் ஜப்பான் சந்தை 1 சதவீதம் வரையில் சரிந்து ஆசிய சந்தையைச் சரிவிற்குத் தள்ளியது.
மார்ச் மாத அர்டர்கள்
வங்கிகள் நீண்ட விடுமுறை மற்றும் மார்ச் மாத ஆர்டர்கள் நாளை முடிவடையும் காரணத்தால் இன்று பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் குறைவான முதலீட்டையே செய்துள்ளனர்.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 205.71 புள்ளிகள் சரிந்து 32,968.68 புள்ளிகளை அடைந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடு 62.85 புள்ளிகள் சரிந்து 10,121.30 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிந்தது.
முக்கிய நிறுவனங்கள்
விப்ரோ, கோல் இந்தியா, ஹீரோ மோட்டோ கார்ப், கோட்டாக் வங்கி, யெஸ் வங்கி ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான உயர்வை அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications