முதல் முறையாக 34,000 புள்ளிகளை தாண்டி வர்த்தகம் செவ்வாய்கிழமை முடிந்த நிலையில், இன்று வர்த்தகம் துவங்கும் போது நிலையான முதலீடு உடன் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 34,100 புள்ளிகள் வரையில் உயர்ந்தது.
ஆனால் ஐரோப்பிய சந்தையால் வர்த்தக முடிவில் சரிவை சந்தித்தது.
முக்கிய துறைகள்
இன்று காலை வர்த்தகத்தில் வங்கி, ஆட்டோ மற்றும் எப்எம்ஜிசி ஆகிய துறையில் கூடுதலான முதலீடு வர்த்தகத்தை தொடர்ந்து உயர்வுடன் கொண்டு சென்றது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
இதனுடன் ஆர்காம் நிறுவனத்தின் கடன் நிலுவையை குறைப்பு குறித்த அறிவிப்புகள் இந்நிறுவனத்தின் வளர்ச்சியை 34 சதவீதத்திற்கு கொண்டு சென்றது மட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் மீதான முதலீடும் அதிகரித்து காணப்படுகிறது.
ஐரோப்பிய சந்தை
இந்நிலையில் ஐரோப்பிய சந்தையின் வர்த்தக துவக்கத்தில் பன்னாட்டு முதலீட்டாளர்கள், அதிகளவில் தங்களது பங்குகளை லாப நோக்கத்தில் விற்றுவிட்டு வெளியேறிவிட்டனர். இதனால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு சரிவை சந்தித்தது.
மும்பை பங்குச்சந்தை
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 98.80 புள்ளிகள் குறைந்து 33,911.81 புள்ளிகளை அடைந்துள்ளது, மேலும் நிஃப்டி குறியீடு 40.75 புள்ளிகள் குறைந்து 10,490.75 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications