அமெரிக்கா பெடரல் வங்கியின் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில் சர்வதேச முதலீட்டாளர்கள் இன்று முதலீட்டு அளவை அதிகளவில் குறைத்தனர். அமெரிக்காவின் முடிவுகள் பற்றிய கணிப்புகளின் தாக்கத்தை நேற்றைய வர்த்தகத்திலேயே நாம் பார்த்தோம்.
நாளை நாடாளுமன்றத்தில் 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் காரணத்தால், உள்நாட்டு முதலீட்டாளர்களும் இன்று முதலீடு செய்யத் தயக்கம் காட்டினர்.

இவை இரண்டுமே இன்றைய வர்த்தகச் சரிவு ஏற்பட முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் சரிவைடைய துவங்கிய சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு வர்த்தக முடிவில் கணிசமான சரிவுடன் முடிவடைந்தது. இதனால் முதலீட்டாளர்கள் பெரிய அளவிலான சரிவில் இருந்து தப்பித்தனர்.
புதன்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 68.71 புள்ளிகள் சரிந்து 36,000 புள்ளிகளில் இருந்து கீழ் இறங்கி 36,965.02 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் 21.95 புள்ளிகள் சரிந்து 11,027.70 புள்ளிகளை அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications