119 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..!
ஆசிய சந்தையின் நிலைப்பாடு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களின் தொடர் முதலீட்டுக் காரணமாக வெள்ளிக்கிழமை காலையில் சிறப்பான வர்த்தகத்தைப் பெற்றாலும் ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் சில தடுமாற்றங்களைச் சந்தித்தாலும், மீண்டும் லாப நிலைக்குத் திருப்பியது.
அதன்பின் மாலை நேர வர்த்தகத்தில் ஐடி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் குறித்த வெளிவந்த கணிப்புகள், பங்குச்சந்தை வர்த்தகத்தை அதிகளவில் பாதித்தது.

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்றும் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 119.01 புள்ளிகள் சரிந்து 26,759.23 புள்ளிகளை அடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 30 புள்ளிகள் குறைந்து 8,243.80 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications