ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் சென்செக்ஸ் 195 புள்ளிகள் சரிவு..!
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை எட்டிய நிலையில், இன்று மும்பை பங்குச்சந்தையில் நவம்பர் மாதத்திற்கான ஆர்டர் முடிவடைகிறது.
இதனால் வியாழக்கிழமை பங்குச்சந்தை வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இதன் வாயிலாக இன்று காலை வர்த்தகம் துவக்கத்தில் இருந்து சென்செக்ஸ் குறியீடு தொடர் வர்த்தகச் சரிவில் தவித்து வந்தது.

வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 191.64 புள்ளிகள் சரிந்து 25,860.17 புள்ளிகளை எட்டியது.
சென்செக்ஸ் குறியீட்டை தொடர்ந்து நிஃப்டி குறியீடு முழுவதும் மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்த நிலையில், வர்த்தக முடிவில் 67.80 புள்ளிகள் சரிந்து 7,965.50 அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications