சென்செக்ஸ் 221 புள்ளிகள் சரிவு..!
நாட்டின் பணவீக்கம் மற்றும் நிலையான வளர்ச்சி அளவுகளைக் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கையின் மறுஆய்வு கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை. இதன் எதிரொலியாக இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு 18 மாதங்கள் உயர்வடைந்தது.
அதைத் தொடர்ந்து அமெரிக்கா சிரியா மீது ஏவுகணைகளைச் செலுத்தியதன் மூலம் ஆசிய பங்குச்சந்தையில் இன்று மந்தமான வர்த்தகத்தைச் சந்தித்தது.

இதன் எதிரொலியாக இன்று வர்த்தகத் துவக்கம் முதல் சென்செக்ஸ் குறியீடு சரிவில் துவங்கியது.
சர்வதேச சந்தையில் அமெரிக்காவின் செயல்கள் மிகப்பெரிய பாதிப்புகளை அளித்துள்ள நிலையில், மும்பை பங்குச்சந்தையில் இன்று நாள் முழுவதும் சரிவிலேயே வர்த்தகம் செய்யப்பட்டு அமெரிக்கச் சந்தை சில மணிநேரங்களில் துவங்கும் நிலையில், சென்செக்ஸ் மளமளவெனச் சரிந்தது.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 220.73 புள்ளிகள் சரிந்து 29,706.61 புள்ளிகளை அடைந்துள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் இன்று மந்தமாகச் செயல்பட்ட நிலையில் 63.65 புள்ளிகள் சரிந்து 9,198.30 புள்ளிகளை எட்டி இந்த வாரத்தின் வர்த்தகம் முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications