அமெரிக்காவில் எப்டிஐ அமைப்பின் விசாரணையில் டொனால்டு டிரம்ப் தலையீட்டின் காரணமாக டிரம் பதவியே கேள்விக்குறியாக உள்ளது எனச் சில முக்கிய ஆய்வுகள் கூறுகிறது. இதனைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் அமரிக்க டாலரின் மதிப்பு 6 மாத சரிவை எட்டியுள்ளது.
இதன் காரணமாக 3 நாள் தொடர் உயர்வில் இருந்து ஆசிய சந்தை இன்று சரிவை சந்துள்ளது.
இந்திய சந்தை
வியாழக்கிழமை ஆசிய சந்தையில் ஏற்பட்ட பாதிப்பு இந்திய சந்தையை அதிகளவில் பாதித்தது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் இன்று லாப நோக்கத்தில் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
மூன்று நாள் உச்சத்தில் இருந்த மும்பை பங்குச்சந்தை இன்றைய வர்த்தகத்தில் வரலாற்று உயர்வில் இருந்து சரிந்துள்ளது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 223.98 புள்ளிகளை இழந்து 30,434.79 புள்ளிகளை அடைந்தது. இதனால் உள்நாட்டு முதலீட்டாளர்கள் இன்று கணிசமான லாபத்தை மட்டுமே அடைந்தனர்.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே வர்த்தகம் துவக்கம் முதல் தொடர் சரிவில் இருந்தது. இதன் காரணமாக இன்றைய வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 96.30 புள்ளிகள் சரிந்து 9,429.45 புள்ளிகளை அடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
வியாழக்கிழமை சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் விப்ரோ, டிசிஎஸ், இன்போசிஸ், லுப்பின், சன் பார்மா, ஏசியன் பெயின்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே உயர்ந்து காணப்பட்டது. பிற அனைத்து நிறுவனங்களும் சரிவை தழுவியது.


Click it and Unblock the Notifications