வாரத்தின் முதல் நாள் வர்த்தகமான இன்று ஆசிய சந்தையில் மந்தமான வர்த்தகத்தைச் சந்தித்ததால், மும்பை பங்குச்சந்தை குறைவான முதலீட்டை மட்டுமே பெற்றது.
இன்றைய வர்த்தகத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு, பவர், டெலிகாம், நுகர்வோர் துறை பங்குகள் அதிகமான விற்பனை செய்யப்பட்டாலும், எப்எம்ஜிசி, கனிம வள நிறுவனங்கள், வங்கியியல், மற்றும் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீட்டு அளவு கணிசமாக உயர்ந்தது.
இதன் வாயிலாக இன்றைய வர்த்தகத்தில் அதிகளவிலான சரிவுகள் தடுக்கப்பட்டது.

மேலும் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மட்டும் இந்திய பங்குச்சந்தையில் இருந்து சுமார் 255.21 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று, தங்களது முதலீட்டை வெளியேற்றி உள்ளனர்.
இந்திய சந்தை முதலீட்டாளர்கள் 165.29 கோடி ரூபாய் அளவிலான பங்குகளை விற்பனை செய்துள்ளது.
இத்தகைய மோசமான சூழ்நிலையில் இன்றைய வர்த்தகத்தைத் துவங்கிய மும்பை பங்குச்சந்தைக்கு ஆசிய சந்தையின் மந்தமான நிலை ஏமாற்றத்தை அளித்தது.
திங்கட்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 32.68 புள்ளிகளை இழந்து, 26,726.55 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு 7.75 புள்ளிகளை இழந்து, 8,236.05 புள்ளிகளையும் அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications