மும்பை: இந்திய சந்தையில் 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் பரிமாற்றத்திற்கு முழுமையான தடை விதிக்கப்பட்ட நிலையில் மக்கள் மத்தியில் அதிகளவிலான பணத் தட்டுப்பாடு நிலவியது.
இதனால் தங்கம், வெள்ளி, பங்குச்சந்தை என அனைத்து வர்த்தகச் சந்தைகளும் பாதிக்கப்பட்ட நிலையில் 19 நாட்களுக்கும் பின் மும்பை பங்குச்சந்தை இன்று நிலையான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.

வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு நிலையான வர்த்தகத்தைப் பெற்று கணிசமான வர்த்தக உயர்வுடன் முடிவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 33.83 புள்ளிகள் உயர்ந்து 26,350.17 புள்ளிகளை அடைந்துள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிலையான வர்த்தகத்தில் சில நிமிடங்களைச் சந்தித்தாலும் நிஃப்டி குறியீடு 12.60 புள்ளிகள் உயர்ந்து 8,126.90 புள்ளிகளை அடைந்தது.


Click it and Unblock the Notifications