திங்கட்கிழமை வர்த்தகத்தில் 610 புள்ளிகள் வரையில் உயர்ந்த சென்செக்ஸ் குறியீடு செவ்வாய்க்கிழமை காலை முதல் மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்தது. இதன் காரணமாக முதலீட்டாளர்களும் தங்களது முதலீட்டை மிகவும் குறைவான அளவிலேயே செய்தனர்.
டிசிஎஸ்
இன்றைய வர்த்தகத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் தனது இருப்பில் இருந்து 1.5 சதவீத டிசிஎஸ் பங்குகளை 1.25 பில்லியன் டாலர் மதிப்பிற்குப் பிளாக் டீலாக விற்பனை செய்துள்ளது.
இதன் வாயிலாக டிசிஎஸ் நிறுவனம் இன்று 5.02 சதவீதம் வரை சரிவை சந்தித்தது.
டெக் முதலீட்டாளர்கள்
டிசிஎஸ் நிறுவனத்தின் வீழ்ச்சியின் காரணமாக மும்பை பங்குச்சந்தையில் ஐடி நிறுவனங்களின் பங்குகள் அதிகளவிலான சரிவை சந்தித்தது. இதனால் டெக் துறை முதலீட்டாளர்களும் முதலீடு செய்யத் தடுமாறினர்.
ஐரோப்பிய சந்தை
காலை முதல் மந்தமான வர்த்தகத்தைப் பெற்று வந்த மும்பை பங்குச்சந்தை லாபத்திலேயே இருந்தாலும், ஐரோப்பிய சந்தை துவக்கத்தில் சரிவை சந்தித்தது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 61.16 புள்ளிகள் சரிந்து 33,856.78 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு 5.45 புள்ளிகள் உயர்வில் 10426.85 புள்ளிகளையும் அடைந்து வர்த்தகம் முடிவடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் டிசிஎஸ் 5.22 சதவீதம் வரையில் சரிந்த நிலையில், கோட்டாக் மஹிந்திரா, கோல் இந்தியா ஆகிய நிறுவனங்கள் 1 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications