90 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!
90 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!
சர்வதேச சந்தையின் நிலையான வர்த்தகத்தின் காரணமாக, இந்திய சந்தையிலும் காலை வர்த்தகம் துவக்கம் முதல் உயர்விலேயே இருந்த நிலையில் வர்த்தக முடிவு சரிவை கண்டது. ஆயினும் லாபகரமான நிலையிலேயே வர்த்தகத்தை முடிந்தது.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ரியலிட்டி, எப்எம்ஜிசி, கேபிடல் கூட்ஸ், உலோகம் துறை சார்ந்த நிறுவனங்கள் பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்யப்பட்டது.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 89.24 புள்ளிகள் உயர்ந்து 29,421.40 புள்ளிகளை எட்டித் தொடர்ந்து 2வது நாளாக உயர்வான நிலையில் வர்த்தகச் சந்தை முடிவடைந்துள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டை போல் நிஃப்டி குறியீடு 21.70 புள்ளிகள் உயர்ந்து 9,108.00 புள்ளிகளை அடைந்து இந்த வாரத்தின் வர்த்தகம் முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications