இந்த வாரம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய இரு நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளிவருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் அதிகளவிலான ஆர்வத்தில் உள்ளனர், இக்காலாண்டில் இரு நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க அளவிலான லாபத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்திய சந்தையில் முதலீடுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
இந்தியாவின் அனைத்துக் கார்பரேட் நிறுவனங்களும் அடுத்தச் சில வாரங்களில் தொடர்ந்து காலாண்டு முடிவுகளை வெளியிடும் காரணத்தால் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குக் கூடுதல் லாபம் உள்ளது.
ஐரோப்பிய சந்தை
வியாழக்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு காலை வர்த்தகத்தில் கணிசமான வர்த்தகத்தை மட்டுமே பெற்று வந்தாலும், ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீடு செய்தனர்
மும்பை பங்குச்சந்தை
இதன் காரணமாக இன்று சென்செக்ஸ் குறியீடு 370 புள்ளிகள் வரை உயர்ந்தது. மேலும் அடுத்தச் சில வர்த்தக நாட்களுக்கு உயர்வுடனே காணப்படும்.
தீபாவளி
வட இந்தியாவில் பொதுவா தீபாவளி பண்டிகையன்று பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்வார்கள், இதற்காக ஒவ்வொரு வருடமும் தீபாவளியன்று சிறப்பு வர்த்தக வாயில் திறக்கப்படும்.
இதேபோல் இந்த வருடமும் திறக்கப்படுகிறது, ஆகையால் அடுத்த வாரம் முழுக்க வர்த்தகச் சந்தை உயர்வுடனே காணப்படும்.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 348.23 புள்ளிகள் உயர்வில் 32,182.22 புள்ளிகளை அடைந்தது. சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் தொடர் உயர்வில் 111.60 புள்ளிகள் உயர்ந்து 10,096.40 புள்ளிகள் உயர்ந்தது.
அதிக முதலீடு
வியாழக்கிழமை வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் ரிலையன்ஸ், சன் பார்மா, ஹின்டால்கோ, பார்தி இன்பராடெல் ஆகிய நிறுவனங்கள் மீது அதிகளவில் முதலீடு செய்தனர்.
பணவீக்கம் அளவீடு
மேலும் இன்று மாலை நேரத்தில் இந்தியாவின் செப்டம்பர் மாதத்திற்கான பணவீக்க அளவீடுகள் வெளியாக உள்ளது. இதன் தாக்கம் கண்டிப்பாகச் சந்தையில் இருக்கும்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications