உயர்வில் முடிந்த மும்பை பங்குச்சந்தை..!
2017-18ஆம் நிதியாண்டில் இந்தியா சிறப்பான பொருளாதார வளர்ச்சியைச் சந்திக்கும் எனச் சர்வதேச நாணய நிதியம் புதன்கிழமை அறிவித்த நிலையில், வர்த்தகச் சந்தைக்கு இது சாதகமாக அமைந்தது.
இதன் அடிப்படையில் இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை உயர்வுடன் துவங்கியதால் உள்நாட்டில் அதிகளவிலான முதலீட்டை ஈர்த்தது.
அன்னிய முதலீடு
கடந்த சில நாட்களாக இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது, இதன் காரணமாகவே மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான மாற்றங்கள் ஏதுமில்லை.
சென்செக்ஸ்
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று வர்த்தக முடிவில் சுமார் 85.82 புள்ளிகள் உயர்ந்து 29,422.39 புள்ளிகளை அடைந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போல் உயர்வுடன் துவங்கினாலும் பல ஏற்ற இறக்கங்களுக்குப் பின் நிஃப்டி குறியீடு 32.90 புள்ளிகள் உயர்ந்து 9,136.40 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, சன் பார்மா, பவர் கிரின்ட், கோல் இந்தியா ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தது.
அதேபோல் கெயில், அதானி போர்ட்ஸ், எச்டிஎப்சி, மாருதி, டிசிஎஸ் ஆகியவை அதிகளவில் உயர்ந்தது.


Click it and Unblock the Notifications