புதன்கிழமை நடத்து முடிந்த இருமாத நாணய கொள்கை மறுஆய்வு கூட்டத்தின் முடிவில் நாட்டின் வளர்ச்சி மற்றும் பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ரிசர்வ் வங்கி வட்டி உயர்த்த மறுப்பு தெரிவித்துள்ளது.
புதன்கிழமை நடத்து முடிந்த இருமாத நாணய கொள்கை மறுஆய்வு கூட்டத்தின் முடிவில் நாட்டின் வளர்ச்சி மற்றும் பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ரிசர்வ் வங்கி வட்டி உயர்த்த மறுப்பு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் வணிக வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி விகிதம் அடுத்த 2 மாதங்களுக்கு 6.25 சதவீதமாகவே தொடரும். இதனால் மும்பை பங்குச்சந்தையில் வங்கிப்பங்குகள் அதிகளவில் சரிவை தழுவியதுய

மேலும் இன்போசிஸ் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் அமெரிக்க அரசு எச்-1பி விசாவில் விதிக்கப்பட உள்ள கட்டுப்பாடுகள் ஐடி நிறுவன பங்களைச் சரிவடையச் செய்துள்ளது. மேலும் இன்போசிஸ் நிறுவனப் பங்குகள் இன்று 1 சதவீதம் வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 45.24 புள்ளிகள் சரிந்து 28,289.92 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு பல ஏற்ற இறக்கங்களுக்குப் பின் 0.75 புள்ளிகள் சரிந்து 8.796.05 புள்ளிகளை அடைந்து புதன்கிழமை வர்த்தகம் முடிவிற்கு வந்தது.

Click it and Unblock the Notifications