சென்செக்ஸ் 213 புள்ளிகள் உயர்வு..!
கடந்த 3 வர்த்தக நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வந்த ஐடி துறை பங்குகள் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் உயர்ந்தாலும், காலாண்டுகள் முடிவுகள் வெளிவரும் காலம் என்பதால் பங்குச்சந்தையில் வர்த்தகம் சற்று மிதமானதாகவே பார்க்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகம் முடிவில் சென்செக்ஸ் நேற்றைய சரிவை ஈடுசெய்தது குறிப்பிடத்தக்கது.
12.7 சதவீத உயர்வு
இந்த ஆண்டில் என்எஸ்ஈ குறியீடு 12.7 சதவீதம் வரை உயர்ந்து வரலாறு காணாத உயர்வான் 9,273.90 புள்ளிகளை அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் இன்போசிஸ், ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களின் உயர்வு இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்திற்கு உந்து சக்தியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்செக்ஸ்
செவ்வாய்க்கிழமை வர்த்தகம் துவக்கம் முதல் தொடர் வர்த்தக உயர்வைச் சந்தித்த நிலையில், மாலையிலும் உயர்வுடன் முடிந்தது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 212.61 புள்ளிகள் உயர்ந்து 29,788.35 புள்ளியை எட்டிய முடிவடைந்தது.
நிஃப்டி குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் என்று தொடர் வர்த்தக உயர்வில் 55.55 புள்ளிகள் உயர்வில் 9,237.00 புள்ளிகளை அடைந்தது.
சர்வதேச சந்தை
செவ்வாய்க்கிழமை ஆசிய சந்தை வர்த்தகத்தில் ஜப்பான், தைவான் ஹாங்காங், சந்தைகள் சரிவை சந்தித்த நிலையில் சீனா, ஆஸ்திரேலியா சந்தைகள் கணிசமான உயர்வை அடைந்தது.
நாணய சந்தை
மேலும் இன்று நாணய சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.47 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications