400 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

மும்பை: பணமதிப்பிழப்புக்குப் பின் தொடர் சரிவில் தத்தளித்து வந்த மும்பை பங்குச்சந்தை நிதியமைச்சரின் அறிவிப்பால் இன்று 406 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.

ஓரே நாளில் 400 புள்ளிகள் வரை உயர என்ன காரணமாக இருக்கும் அருண் ஜேட்லியின் அறிவிப்பு என்ன..?

கேப்பிடல் கெயின்ஸ் டாக்ஸ்

கேப்பிடல் கெயின்ஸ் டாக்ஸ்

மத்திய அரசு பல நாட்களாகக் கேப்பிடல் கெயின்ஸ் டாக்ஸ்-ஐ உயர்த்தத் திட்டமிட்டு வருவதால் முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் முதலீட்டை அதிகளவில் குறைத்தனர். மேலும் இதற்கான அறிவிப்பு பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் எனவும் செய்திகள் வெளியானது.

 அருண் ஜேட்லி

அருண் ஜேட்லி

இந்நிலையில் மத்திய நிதியமைச்சரான அருண் ஜேட்லி 2017ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வரி விதிப்பில் அதிகளவிலான குறைப்பு இருக்கும் என்பதற்கான சமிக்கைகளை அளித்துள்ளார்.

ப்ளூ சிப் பங்குகள்

ப்ளூ சிப் பங்குகள்

இதனையடுத்து இன்றைய வர்த்தகத்தில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் முதல் அன்னிய முதலீட்டாளர்கள் வரை இந்திய சந்தையில் ப்ளூ சிப் பங்குகள் மீது முதலீடு செய்தனர். இதன் வாயிலாகத் தொடர் உயர்வில் மும்பை பங்குச்சந்சையின் சென்செக்ஸ் குறியீடு 406.34 புள்ளிகள் உயர்ந்து 26,213.44 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

 நிஃப்டி

நிஃப்டி

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் தொடர் உயர்வில் 124.60 புள்ளிகள் வரை 8,032.85 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.

26,000 புள்ளிகள்

26,000 புள்ளிகள்

அமெரிக்க அதிபர் தேர்தல், பெடரல் வங்கியின் வட்டி உயர்வு, இந்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் மூலம் சென்செக்ஸ் குறியீடு 25,200 புள்ளிகள் வரை சரிந்த நிலையில், பல நாட்களுக்குப் பின் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 26,000 புள்ளிகளை மீண்டும் எட்டிப்பிடித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+