இந்திய சந்தையில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியாலும், மத்திய அரசு இறக்குமதிகளில் அறிவிக்கப்பட்ட சில தளர்வுகளால் ஐடி மற்றும் ஸ்டீல் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகளவிலான உயர்வை இன்று சந்தித்தது.
இதனுடன் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வியாழக்கிழமை வீழ்ச்சியில் இருந்து வெள்ளிக்கிழமை 68.46 ரூபாயாக உயர்ந்தது. டிசம்பர் மாதத்திற்கான ஆர்டர் துவக்கம் ஆகியவை வெள்ளிக்கிழமை வர்த்தகத்தை 1.7 சதவீதம் அளவிலான உயர்வுக்குக் கொண்டு சென்றது.

மேலும் இன்றைய மும்பை பங்குச்சந்தை வர்த்தக வளர்ச்சிக்கு ஆசிய சந்தை உறுதுணையாக நின்றது.
வாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 456.17 அதாவது 1.76 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடைந்து 26,316.34 புள்ளிகளை எட்டியுள்ளது.
இதனுடன் நிஃப்டி குறியீடு 148.80 புள்ளிகள் உயர்ந்து 8,114.30 புள்ளிகளை அடைந்து இந்த வார வர்த்தகம் முடிவிற்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications