வெறும் 53 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!
சர்வதேச சந்தையில் நிலவும் சாதகமான சூழ்நிலையின் மூலம் இந்திய பங்குச்சந்தையில் இன்று முதலீட்டு அளவு கணிசமாக அதிகரித்துக் காணப்பட்டது.
இதன் வாயிலாக வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டைத் திட்டத்தைத் தேர்தெடுக்க, ப்ளூ சிப் பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்தனர்.

இந்நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 52.90 புள்ளிகள் உயர்ந்து 26,747.18 புள்ளிகளும், நிஃப்டி குறியீடு 14.90 புள்ளிகள் உயர்ந்து 8,261.75 புள்ளிகளை எட்டி இவ்வாரத்தின் வர்த்தகம் முடிவடைந்தது.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் பஜாஜ் ஆட்டோ, கோல் இந்தியா, எச்டிஎப்சி, மஹிந்திரா, ஹீரோ மோட்டோகார்ப், பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.


Click it and Unblock the Notifications