38000 புள்ளிகளைக் கடக்க முக்கும் Sensex!ஏற்றம் மறந்த Nifty!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: சென்செக்ஸ் இன்றோடு சேர்த்து மூன்று நாட்களாக தொடர்ந்து 38,000 புள்ளிகளுக்குள் நிறைவடைந்து இருக்கிறது. சென்செக்ஸ் தன் 38,000 புள்ளிகளைக் கடந்து மார்ச் 15, 2019-க்குப் பிறகு மே 08, 2019 முதல் மே 17, 2019 வரை சென்செக்ஸ் இந்த 38,000 என்கிற ரெசிஸ்டென்ஸுக்குள்ளேயே வர்த்தகமானது. அதன் பின் ஜூலை 23, 2019 முதல் இன்று வரை சென்செக்ஸ் இந்த 38,000 என்கிற ரெசிஸ்டென்ஸுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது.

ஜூலை மாதத்தின் கடைசி வியாழக்கிழமையான இன்று, ஜூலை மாத ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்கள் காலாவதியானது, காலாண்டு முடிவுகள் சுரத்து இல்லாமல் சுமாராக வெளியாகிக் கொண்டிருப்பது போன்ற காரணங்களால் சந்தை இன்றும் பெரிய ஏற்ற இறக்கங்களை காணாமல் ஃப்ளாட்டாக 38,000 புள்ளிகளுக்கு கீழ் நிறைவடைந்து இருப்பதாகச் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள்.

38000 புள்ளிகளைக் கடக்க முக்கும் Sensex!ஏற்றம் மறந்த Nifty!

இன்று காலை சென்செக்ஸ் 37,935 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி இறக்கம் கண்டு 37,830 புள்ளிகளில் நிறைவடைந்திருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட 16 புள்ளிகள் கூடுதல் இறக்கம். அதே போல் நிஃப்டி50 இண்டெக்ஸ் காலை 11,290 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,252 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 19 புள்ளிகள் கூடுதலாக சரிந்திருக்கிறது.

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 16 பங்குகள் ஏற்றத்திலும், 14 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 22 பங்குகள் ஏற்றத்திலும், 27 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,603 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,082 பங்குகள் ஏற்றத்திலும், 1,353 பங்குகள் இறக்கத்திலும், 168 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,603 பங்குகளில் 25 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 412 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் அனைத்து துறை சார் பங்குகளும் பெரிய ஏற்ற, இறக்கங்கள் இல்லாமல் வர்த்தகமாயின. இன்று வர்த்தக நேரத்தில் பஜாஜ் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், யெஸ் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.

வேதாந்தா, சிப்லா, ஜி எண்டர்டெயின்மெண்ட், சன் பார்மா, இண்டஸ் இண்ட் பேங்க் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், கோல் இந்தியா, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல் போன்ற நிறுவனப் பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

sensex continues to be under 38000 mark for the third straight day

sensex continues to be under 38000 mark for the third straight day
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X