சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி.. முதல் நாளே நஷ்டமா.. கடுப்பில் முதலீட்டாளர்கள்!

மும்பை: இந்திய பங்கு சந்தையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் இன்று வீழ்ச்சி கண்டு காணப்படுகின்றது. வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று பெரும் வீழ்ச்சியில் காணப்படுகின்றது.

இன்று தொடக்கத்திலேயே பலத்த சரிவில் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 406.45 புள்ளிகள் சரிந்து அல்லது 0.70% குறைந்து, 57,583.45 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 120.30 புள்ளிகள் அல்லது 0.70% சரிவினைக் கண்டு, 16,979.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 841 பங்குகள் ஏற்றம் கண்டும், 1158 பங்குகள் சரிவினைக் கண்டும், 143 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

ரூபாயின் மதிப்பு?

ரூபாயின் மதிப்பு?

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது இன்று 82.49 ரூபாயாக சற்றே உயர்ந்து காணப்படுகின்றது. இது கடந்த அமர்வில் 82.55 ரூபாயாக காணப்படுகின்றது.

அன்னிய செலாவணி கையிருப்பு என்பது சரிவினைக் கண்டுள்ள நிலையில், இது ரூபாயில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பங்கு சந்தையிலும் இதன் தாக்கம் என்பது இருக்கலாம்.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீடு

தொடர்ந்து இந்திய சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் என்பது வெளியேறி வருகின்றது. இது வரவிருக்கும் அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்தின் மத்தியில் மார்ச் 17 நிலவரப்படி, 1766.53 கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய முதலீடானது வெளியேறியுள்ளது. இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 1817.14 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடானது உள்ளே வந்துள்ளது. எனினும் இன்றும் இனி வரவிருக்கும் நாட்களில் அன்னிய முதலீடானது சந்தையில் முக்கிய பங்கு வகிக்கலாம். இது அமெரிக்கா வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

குறியீடுகள்

குறியீடுகள்

இன்று சந்தையில் உள்ள அனைத்து குறியீடுகளுமே சரிவில் தான் காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ டெக், பிஎஸ்இ மெட்டல்ஸ், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ மிட் கேப், நிஃப்டி ஐடி, பேங்க் நிஃப்டி, சென்செக்ஸ், நிப்டி என அனைத்து குறியீடுகளும் 1% மேலாக சரிவில் காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் சரிவில் காணப்பட்டாலும் அவை 1% கீழாக சரிவில் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள பிபிசிஎல், டாக்டர் ரெட்டீஸ் லெபரட்டீஸ், ஹெச்.யு.எல், ஓ.என்,ஜி.சிம், டிவிஸ் லேப்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், டெக் மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஹெச்.யு.எல், கோடக் மஹிந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டெக் மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் பின்செர்வ், இந்தஸ் இந்த் வங்கி, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போதைய நிலவரம் என்ன?

தற்போதைய நிலவரம் என்ன?

இன்று தொடக்கத்திலேயே பலத்த சரிவில் காணப்பட்ட சந்தை, தற்போது 10.13 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 625.95 புள்ளிகள் சரிந்து அல்லது 1.08% குறைந்து, 57,363.95 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 189.3 புள்ளிகள் அல்லது 1.11% சரிவினைக் கண்டு, 16,910.3 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+