மும்பை: இந்திய பங்கு சந்தையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் இன்று கடும் வீழ்ச்சியினை கண்டு வருகின்றது. இன்று காலை தொடக்கத்திலேயே பலத்த சரிவில் காணப்பட்டது. தற்போது 2.17 மணியளவில் குறிப்பாக சென்செக்ஸ் 731.7 புள்ளிகள் சரிந்து அல்லது 1.24% குறைந்து, 57,272.65 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 209 புள்ளிகள் அல்லது 1.22% சரிவினைக் கண்டு, 16,890.70 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது.
இது அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி நெருக்கடி என பல்வேறு வங்கி பிரச்சனைகளுக்கு மத்தியில், தொடர்ந்து பங்கு சந்தைகள் சரிவினைக் கண்டு வருகின்றன. இந்த பிரச்சனை வெளியான மார்ச் 9ல் இருந்து, சென்செக்ஸ் 3000 புள்ளிகளுக்கு மேலாக வீழ்ச்சி கண்டு காணப்படுகின்றது.
முக்கிய முடிவு
அமெரிக்காவில் பல்வேறு வங்கிகள் சிக்கலில் இருந்து வரும் நிலையில், சுவிஸ் வங்கியானது பெரும் நிதி சிக்கலில் இருந்து வரும் நிலையில் பணப்புழக்க பிரச்சனையில் மாட்டிக் கொண்டது.எனினும் கிரெடிட் சூயிஸ் நிலைமை மேம்பட்டதாக தெரியாத நிலையில் கிரெடிட் சூயிஸ் வங்கியை மொத்தமாகவும், பகுதியாகவும் விற்பனை செய்யப்பட பேச்சுவார்த்தை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் சுமார் 3 பில்லியன் பிராங்க் தொகைக்கு கிரெடிட் சூயிஸ் வங்கியை வாங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ஆசிய சந்தைகள் சரிவு
ஆசிய சந்தைகளில் சரிவு ஏற்படும் நிலையில், இந்திய பங்கு சந்தையானது சரிவினைக் கண்டு வரும் நிலையில், பங்குகள் கடும் வீழ்ச்சியினை கண்டு வருகின்றன. குறிப்பாக ஹாங்காங் பங்கு சந்தை குறியீடானது 2.5% ஆகவும், ஜப்பானின் நிக்கி மற்றும் ஆஸ்திரேலியாவின் ASX200 குறியீடானது 1% மேலாக சரிவிலும் காணப்படுகிறது.
ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம்
ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டமானது மார்ச் 21 - 22 ஆனது நடக்கவுள்ள நிலையில், இந்த மத்திய வங்கி கூட்டத்தில் வட்டி விகிதமானது மீண்டும் அதிகரிக்கலாம். இது பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். வட்டி விகிதம் என்பது பணவீக்கத்தினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருக்கலாம் என்றாலும், பங்கு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
அன்னிய முதலீடுகள்
தொடர்ந்து இந்திய சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் என்பது வெளியேறி வருகின்றது. இது வரவிருக்கும் அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்தின் மத்தியில் மார்ச் 17 நிலவரப்படி, 1766.53 கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய முதலீடானது வெளியேறியுள்ளது. மொத்தமாக நடப்பு ஆண்டில் மொத்தமாக 23,000 கோடி ரூபாய் எனும் அளவுக்கு முதலீடுகள் வெளியேறியுள்ளது.
அதானி பங்குகள்
10 அதானி பங்குகளில் 8 அதானி பங்குகள் தொடர்ந்து இன்று அழுத்தத்தில் காணப்படும் நிலையில், அதானி குழுமத்தின் 34,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டமானது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது மேற்கொண்டு அதானி குழும பங்குகளில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அதானி எண்டர்பிரைசஸ், அதானி பவர் மற்றும் அதானி டோட்டல் கேஸ் பங்கு விலையானது 4% சரிவில் காணப்படுகின்றது.
இவ்வளவு இழப்பா?
பங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவுக்கு மத்தியில் முதலீட்டாளர்களுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. இதன் காரணமாக பி.எஸ்.இயில் உள்ள நிறுவனங்களின் சந்தை மூலதனம் என்பது 255.43 கோடி ரூபாய் எனும் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!



Click it and Unblock the Notifications