இன்று காலை தொடக்கத்திலேயே பெரும் சரிவில் தொடங்கிய இந்திய சந்தையானது, தற்போது பலத்த சரிவில் காணப்படுகின்றது.
இது 1.05 நிலவரப்படி சென்செக்ஸ் 1793. 76 புள்ளிகள் குறைந்து, அல்லது 3.15% சரிவினைக் கண்டு 55,217.98 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 550.35 புள்ளிகள் குறைந்து அல்லது 3.24% குறைந்து, 16,434.85 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
இதற்கிடையில் சென்செக்ஸ் , நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சரிவிலேயே காணப்படுகின்றன.
ரூபாய் சரிவு
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 9 பைசா சரிவினைக் கண்டு 76.15 ரூபாயாக குறைந்து காணப்படுகின்றது. இது தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வரும் நிலையில் சந்தையானது அழுத்தத்தில் காணப்படுகின்றது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து உள்நாட்டு முதலீடுகள் அதிகரித்து வந்தன. இன்று சந்தையானது தொடர்ந்து பலத்த சரிவினைக் கண்டு வரும் நிலையில் சந்தையில் விற்பனை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ரூபாயின் மதிப்பானது மேற்கொண்டு சரிவில் காணப்படுகின்றது.
முக்கிய காரணிகள்
ஓமிக்ரான் அச்சம், வட்டி விகித மாற்றம், பணவீக்கம் என பல்வேறு சர்வதேச காரணிகளும் சந்தைக்கு எதிராக இருந்து வரும் நிலையில்,சர்வட்ஹேச பங்கு சந்தைகாள் சரிவில் காணப்படுகின்றன. இதன் எதிரொலி இந்திய சந்தையிலும் காணப்படுகின்றது. இதனால் இந்திய சந்தையில் பலத்த சரிவானது தொடர்ந்து வருகின்றது.
இன்டெக்ஸ் நிலவரம்
சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ மெட்டல்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் 4% மேலாக சரிவில் காணபப்டுகின்றன. இதே நிஃப்டி பிஎஸ்இ,பிஎஸ்இ ஸ்மால் கேப்ஸ், பிஎஸ்இ மிட் கேப்ஸ், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கேப்பிட்டல், பிஎஸ்இ ஆயில் & கேஸ், பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ ஆயில் & கேஸ் 3% மேலாக சரிவிலும், பிஎஸ்இ கன்சியூமர் குட்ஸ், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக சரிவிலும் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்
நிஃப்டி குறியீட்டில் உள்ள சிப்லா, ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே பிபிசிஎல், டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் பைனான்ஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், விப்ரோ உள்ளிட்ட பங்குகள் மட்டுமே டாப் கெயினராகவும், இதே பஜாஜ் பைனான்ஸ், டாடா ஸ்டீல், இந்தஸ் இந்த் வங்கி, என் டி பி சி உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
தற்போது (1.47 மணி நிலவரப்படி) சென்செக்ஸ் 1,455.14 புள்ளிகள் குறைந்து, 55,556.60 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 453.8 புள்ளிகள் குறைந்து, 16,531.40 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது.
ஸ்ரீராம் பிராபர்டீஸ் பங்கானது இன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட நிலையில், இது 20% கீழாக டிஸ்கவுண்ட் விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications