நடப்பு வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று இந்திய சந்தைகள் பலத்த சரிவில் காணப்படுகின்றன.
கடந்த அமர்வில் அமெரிக்க பங்கு சந்தைகள் சரிவில் முடிவடைந்ததையடுத்து, ஆசிய சந்தைகளும் சரிவில் தான் தொடங்கியது. அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் சரிவில் காணப்படுகிறது.
இதற்கிடையில் இன்று தொடக்கத்தில் சென்செக்ஸ் 917.24 புள்ளிகள் குறைந்து, 50,122.07 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 267.80 புள்ளிகள் குறைந்து, 14,829.60 புள்ளிகளாகவும் காணப்பட்டது. தொடக்கத்தில் 900 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ் பின், 1000 புள்ளிகளுக்கு மேல் சரிவினைக் கண்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக மாருதி சுசூகி, கோல் இந்தியா, என்டிபிசி, ஐஓசி, நெஸ்டில் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே இந்தஸிந்த் வங்கி, ஹெச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், மாருதி சுசூகி, என்டிபிசி, சன் பார்மா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே இந்தஸிந்த் வங்கி, ஹெச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சர்வதேச சந்தைகள் சரிவு
முந்தைய அமர்வில் அமெரிக்க பங்கு சந்தைகள் அழுத்தத்தில் காணப்பட்ட நிலையில், ஆசிய சந்தைகள் பலவும் சரிவில் காணப்படுகின்றன. குறிப்பாக ஆஸ்திரேலியாவின் S&P/ ASX200 2$ மேலாக சரிவிலும், இதே ஜப்பானின் நிக்கி 1.8% சரிந்தும், ஹாங்காங்கின் ஹேங் ஷேங் 1.69% சரிவிலும் காணப்பட்டது.
தற்போதைய நிலவரம்
தற்போது சென்செக்ஸ் 815.17 புள்ளிகள் குறைந்து, 50,224.14 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 227.70 புள்ளிகள் குறைந்து, 14,869.65 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
இது இன்று வார இறுதி வர்த்தக நாள் என்பதால் புராபிட் புக்கிங்க் காரணத்தாலும் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications