இந்திய பங்கு சந்தை கடந்த 3 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் பெரும் நம்பிக்கை உடன் இருந்தனர், ஆனால் சொல்லி வைத்தார் போல் அடுத்தடுத்து நடந்த 4 சம்பவங்கள் 3 நாள் சரிவை மொத்தமாக முடித்துவிட்டது மட்டும் அல்லாமல் பெரும் இழப்பை முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
இந்திய பங்குச்சந்தையில் இன்று உள்நாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் என அனைத்து தரப்புகளும் இன்று கடுமையான விற்பனை செய்தன, கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்த உயர்வு திடீரென முறிந்தது.

சென்செக்ஸ் 2,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 74,685.52 என்ற குறைந்த அளவை எட்டியது. அதேபோல் நிப்டி 50 குறியீடு 600 புள்ளிகள் சரிந்து 23,180.95 வரை வீழ்ந்தது. மேலும் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளும் 2% வரை வீழ்ச்சியடைந்ததால், சந்தை முழுவதும் ரத்தக்களறியானது.
இந்த திடீர் வீழ்ச்சியின் விளைவாக, மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.439 லட்சம் கோடியில் இருந்து ரூ.430 லட்சம் கோடியாக குறைந்தது. இதனால் ஒரே நாளில் ரூ.9 லட்சம் கோடிக்கும் அதிகமான சந்தை மதிப்பு இழப்பு ஏற்பட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு மாயமானது.
இன்றைய சந்தை சரிவுக்கு 5 முக்கிய காரணம்
HDFC வங்கி அதிர்ச்சி
HDFC வங்கியின் தலைவர் அதானு சக்ரபர்த்தி திடீரென பதவி விலகியுள்ளார். வங்கியின் சில நடைமுறைகள் தனது தனிப்பட்ட மதிப்புகளுடன் பொருந்தவில்லை என்பதே அவரது விளக்கமாக இருந்துள்ளது. இது இந்தியாவின் பெரிய வங்கி என்பதால் இந்த கருந்து முதலீட்டாளர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
இதன் விளைவாக HDFC வங்கி பங்கு 8% க்கும் மேல் சரிந்து ரூ.772 என்ற 52 வார குறைந்த நிலையை எட்டியது. இது குறியீடுகளில் பெரிய அளவில் அழுத்தத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் மொத்த வங்கி பங்குகளுக்கும் இதன் தாக்கம் எதிரொலித்தது.
போர் பதற்றம்
இன்றைய சரிவுக்கு முக்கிய காரணமாக அமெரிக்கா - ஈரான் மோதல் தீவிரமடைந்திருப்பது தான். ஈரானின் முக்கிய எரிவாயு தளங்களை இஸ்ரேல் தாக்கப்பட்டதையடுத்து, இதை தொடர்ந்து ஈரான் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த நிலைமை உலகளாவிய முதலீட்டாளர் நம்பிக்கையை பாதித்து, பங்கு சந்தையில் பெரும் விற்பனையை தூண்டியுள்ளது.
அமெரிக்க மத்திய வங்கி முடிவு
அமெரிக்காவின் மத்திய வங்கியான Federal Reserve தனது வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருந்தாலும், எதிர்காலத்தில் வட்டி குறைப்புகள் குறைவாக இருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026 ஆம் ஆண்டில் ஒரே ஒரு 0.25% வட்டி குறைப்பு மட்டுமே இருக்கும் என பெட் தலைவர் ஜெரோம் பவல் தெரிவித்துள்ளார்.
மேலும், பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் குறித்து Fed எச்சரிக்கை விடுத்தது முதலீட்டாளர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
இந்திய ரூபாய் டாலருக்கு எதிராக 92.89 என்ற புதிய குறைந்த நிலையை எட்டியுள்ளது. இது வெளிநாட்டு முதலீட்டாளர்களை மேலும் எச்சரிக்கையாக மாற்றியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை
இஸ்ரேல் - ஈரான் மத்தியிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 5% க்கும் மேல் உயர்ந்து ஒரு பேரலுக்கு 113 டாலராக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயத்தை உருவாக்கி, மத்திய வங்கிகள் கடுமையான கொள்கைகளை பின்பற்றும் சூழ்நிலையை உருவாக்குகிறது.
இந்த 5 முக்கிய காரணத்தால் இந்திய சந்தையில் முதலீடு செய்துள்ள Foreign Institutional Investors (FIIs) தொடர்ந்து இந்திய பங்குகளை விற்பனை செய்து முதலீட்டை வெளியேற்றி வருகின்றனர். கச்சா எண்ணெய் விலை உயர்வும், எரிவாயு விநியோகத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றம் இந்திய பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கும்.
More From GoodReturns

ரூ.7 லட்சம் கோடி மாயம்.. பங்குச்சந்தையில் என்ன தான் நடக்குது..?

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

ரத்தகளரியான பங்குச் சந்தை!20 லட்சம் கோடி காலி - முதலீட்டாளர்களின் லாப கனவு கலைந்தது எப்படி?

Out Of Stock ஆன இண்டக்ஷன் ஸ்டவ்.. பங்குச்சந்தையில் கில்லி ஆக மாறிய 3 பங்குகள்.. ரெடியாகும் முதலீட்டாளர்கள்..!!

அந்தர் பல்டி அடித்த அதானி டோட்டல் கேஸ் பங்குகள்.. முதலீட்டாளர்கள் ஷாக்..!!

கதறி கதறி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போரின் கோரமுகம் இந்தியாவில் எதிரொலி..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்களுக்கு செபி தலைவர் கூறும் அட்வைஸ்

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!



Click it and Unblock the Notifications