இந்திய பங்குச் சந்தை டிசம்பர் 8 திங்கட்கிழமை பெரும் சரிவை சந்தித்த நிலையிஸ், டிசம்பர் 9ஆம் தேதியும் பெரும் சரிவை பதிவு செய்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 609.68 புள்ளிகள் (0.71 சதவீதம்) குறைந்து 85,102.69இல் முடிந்தது, நிஃப்டி 225.90 புள்ளிகள் (0.86 சதவீதம்) சரிந்து 25,960.55ஆக இருந்தது. இது இரண்டு மாதங்களில் வந்த மிகப்பெரிய சரிவாகும்.
ஆனால் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) வர்த்தகம் தொடங்கியதும் சரிவு தொடர்ந்தது - சென்செக்ஸ் 700 புள்ளிகள் குறைந்து 84,400க்கு கீழேயும், நிஃப்டி 200 புள்ளிகள் சரிந்து 25,750க்கு கீழ் வர்த்தகமாகிறது. ஆனால் 2 மணிநேரத்தில் சென்செக்ஸ் குறியீடு வெறும் 328 புள்ளிகள் சரிவுடன் 84,774.09 புள்ளிகளில் முடிந்துள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 105 புள்ளிகள் சரிந்து 25,856.20 புள்ளிகளில் முடிந்துள்ளது.

சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில், ஏசியன் பெயின்ட்ஸ் மோசமான சரிவான 3.35 சதவீத அளவீட்டை பதிவு செய்துள்ளது. இதோடு டிசிஎஸ், மஹிந்திரா, ஹெச்சிஎல், இன்போசிஸ், டெக் மஹிந்திரா, ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி, அல்ட்ராசெக், டாடா மோட்டார்ஸ், மாருதி ஆகியவை அதிகப்படியான சரிவை பதிவு செய்துள்ளது.
இந்த சரிவுக்கு பல முக்கியமான காரணங்கள் உள்ளது, இந்த காரணங்களை முழுமையாக புரிந்துக்கொள்வதன் மூலம் சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் ஏற்படும் சரிவு எப்போது நிலைபெறும் என்பது தெரிய வரும்.
ஃபெட் வட்டி குறைப்பு
டிசம்பர் 10 அன்று அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகித முடிவுகளை அறிவிக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் பதற்றத்தில் உள்ளனர். பெடரல் ரிசர்வ் சுமார் 25 அடிப்படைப் புள்ளிகள் (bps) குறைக்க 90 சதவீத வாய்ப்புடன் உள்ளது. ஆனால் பெடரல் ரிசர்வ் வங்கியின் பேச்சு ஹாக்கிஷ் தொனியில் இருக்கலாம் என்ற அச்சம் உள்ளது.
இந்த வட்டி விகித குறைப்பும், கொள்கை முடிவுகளும் டாலரை வலுப்படுத்தி, ரூபாய் மதிப்பை மோசமாக்கலாம். இது ரீடைல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களை அதிகம் பாதிக்கும் வகையில் இருக்கும் என்ற அச்சமே, இன்றைய பங்குச்சந்தை சரிவுக்கு முக்கியமான காரணமாக உள்ளது.
உலக சந்தைகள் சரிவும்
பெடரல் ரிசர்வ்-ன் வட்டி விகித முடிவுகளின் அச்சம் ஆசிய சந்தைகளில் எதிரொலித்துள்ளது. இதனால் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் துவங்கும்போதே மோசமான சரிவுடன் தொடங்கின, இதில் இந்திய சந்தையின் சரிவு அதிகமாக உள்ளது.
அன்னிய முதலீடுகளின் வெளியேற்றம்
டிசம்பர் 8ஆம் தேதி வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) ரூ.656 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்று தங்களது முதலீட்டை வெளியேற்றியுள்ளனர். இதனால் ரூபாய் மதிப்பும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதோடு நேற்றைய வர்த்தகத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (DII) ரூ.2,542 கோடி முதலீடு செய்து ஆதரவளித்தாலும், FII விற்பனை பங்குச்சந்தை சரிவை மோசமாக்கியுள்ளது.
ரூபாய் மதிப்பு பாதிப்பு
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) வெளியேறிய காரணத்தால் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு இன்று 10 காசுகள் சரிந்து 90.15ஆக உள்ளது, இது புதிய உச்சத்தை நெருங்குகிறது. ரூபாய் மதிப்பு குறைந்த காரணத்தால் வழக்கத்தை காட்டிலும் நிறுவனங்கள், இறக்குமதியாளர்கள் மத்தியில் அதிகளவிலான டாலர் தேவை உருவாகியுள்ளது. இதனால் ரூபாய் மதிப்பு கூடுதல் தாக்கத்தை எதிர்கொள்கிறது.
நிஃப்டி எக்ஸ்பயரி
செவ்வாய்க்கிழமை நிஃப்டி வாராந்திர டெரிவேட்டிவ்ஸ் (F&O) எக்ஸ்பயரி காரணமாக ஏற்ற இறக்கம் அதிகரித்தது. டிசம்பர் 9 எக்ஸ்பயரி ஒப்பந்தங்கள் மூலம் வர்த்தகர்கள் நிலைகளை மாற்றியதால் ஏற்ற இறக்கம் ஏற்பட்டது. இது சந்தையை மேலும் பதற்றமாக்கியது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications