39,831-ல் சென்செக்ஸ்30 இண்டெக்ஸ்..! 11,786-ல் நிஃப்டி50..!

இன்று இந்திய பங்குச் சந்தையில், தொடர்ந்து முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் பங்குகளை வாங்கிக் கொண்டே இருந்தார்கள். இதனால் தான் சென்செக்ஸ் மேலே ஏற்றம் கண்டு கொண்டே இருந்தது என்கிறார்கள் அனலிஸ்டுகள். ஆக சென்செக்ஸின் இறக்கம் எல்லாம் முடிந்து தற்போது ஏற்றம் காணும் என்கிற நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது. அந்த நம்பிக்கையில் லாபம் பார்ப்பதற்காக முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்வதாக இதைப் பார்க்க முடிகிறது. இப்போது வரை சந்தையின் போக்கை மாற்றி இறக்கம் கான வைக்கும் செய்திகள் எதுவும் இல்லை.

எனவே, ஒரு வேளை சந்தை நாளையும் இந்த டிரெண்டைப் பின் பற்றி ஏற்றம் கண்டால் கூட, 39,850 புள்ளிகளில் நிலைத்து நிற்பது பெரிய விஷயம் தான். காரணம் 39,500 லெவல்களை கடந்த ஜூலை 05-ம் தேதிக்குப் பின் ஒரு முறை கூட சென்செக்ஸ் இந்த 39,500 லெவல்களைத் தொட்டதில்லை எனச் சொல்லி இருந்தோம். எனவே அந்த சப்போர்ட்டை அப்படியே வைத்துக் கொள்வோம். ஒருவேளை அதையும் மீறி நல்ல ஏற்றம் கண்டால், 39,850 புள்ளிகளை மீண்டும் அசால்டாக கடந்தால், அடுத்த டார்கெட் 40,000 அடுத்த வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கும்.

39,831-ல் சென்செக்ஸ்30 இண்டெக்ஸ்..! 11,786-ல் நிஃப்டி50..!

சென்செக்ஸின் வாராந்திர சார்ட்டில், சென்செக்ஸின் வலுவான ரெசிஸ்டென்ஸ் புள்ளியாக 40,000 தெளிவாகத் தெரிகிறது. ஏற்றாத்துக்கான டிரெண்டு இன்னும் மாறுபட்டதாகத் தெரியவில்லை. எனவே இனி வரும் வர்த்தக நாட்களில், நல்ல காலாண்டு முடிவுச் செய்திகளை வைத்து சென்செக்ஸ் உயரும் என எதிர்பார்க்கலாம். ஏற்கனவே சொன்னது போல சென்செக்ஸ் 40,500 புள்ளிகளை இலக்காக வைத்துக் கொள்ளலாம்.

ஒருவேளை சந்தை இறக்கம் காணத் தொடங்கினால் 39,500 முதல் சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் கடந்த சில மாதங்களில், 39,500 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் நிறைவு அடையவில்லை என்பதால், அதை வலுவான சப்போர்ட்டாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே அடுத்த வலுவான சப்போர்ட்டாக 39,200 புள்ளிகளை எடுத்துக் கொள்ளலாம்.

நேற்று மாலை சென்செக்ஸ் 39,250 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 39,293 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 39,831 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 581 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது. இன்று காலை நிஃப்டி 11,643 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,786 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 159 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 26 பங்குகள் ஏற்றத்திலும், 04 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 39 பங்குகள் ஏற்றத்திலும், 11 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,677 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,435 பங்குகள் ஏற்றத்திலும், 1,029 பங்குகள் இறக்கத்திலும், 213 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,677 பங்குகளில் 90 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 138 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் மீடியா தவிர மற்ற அனைத்து துறை சார் இண்டெக்ஸ்களும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஆட்டோ, மெட்டல், ஐடி, தனியார் பேங்க் போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாயின.

டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ஜெ எஸ் டபிள்யூ ஸ்டீல், யெஸ் பேங்க், மாருதி சுசூகி போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. பார்தி இன்ஃப்ராடெல், பார்தி ஏர்டெல், அல்ட்ராடெக் சிமெண்ட், கோட்டக் மஹிந்திரா, நெஸ்ட்லே போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 70.89-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 60.55 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+