சென்செக்ஸ் மீண்டும் 36,000 புள்ளிகளை கடந்தது, நிப்டி 10,947 புள்ளியாக வர்த்தகமானது..!

மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 2018 ஜனவரி 28-ம் தேதிக்கு பிறகு மீண்டும் 36,000 புள்ளிகளைக் கடந்துள்ளது. மூன்றாவது நாளாக ஆசிய பங்கு சந்தை முன்னேற்றத்தினை கண்டு வருகிறது. இதற்கு கார்ப்ரேட் வருவாய் மீது வர்த்தகர்கள் செலுத்தி வரும் ஆர்வமே ஆகும்.

அதே நேரம் இந்திய ரூபாய் மதிப்பு அமெரிக்க, சீனா இடையிலான வர்த்தக போரின் தாக்கத்தில் சிக்கி டாலருக்கு எதிராக சரிந்து வருகிறது. இன்று தங்கம் விலையும் 10 கிராமுக்கு 270 ரூபாய் வரை சரிந்துள்ளது.

 இன்றைய பங்கு சந்தை நிலவரம்

இன்றைய பங்கு சந்தை நிலவரம்

சந்தை முடியும் போது மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 340.90 புள்ளிகள் என 0.85 சதவீதம் உயர்ந்து 36,239.62 புள்ளிகளாகவும், தேசிய பங்குசந்தை குறியீடான நிப்டி 94.35 புள்ளிகள 10,947.25 புள்ளிகளையும் எட்டியது. இப்படியே சென்றால் விரைவில் நிப்டி மீண்டும் 11,000 புள்ளிகளை தொடடும் என்று வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 துறை வாரியான நிலவரம்

துறை வாரியான நிலவரம்

மும்பை பங்கு சந்தையினை பொறுத்தவரையில் எனர்ஜி, ரியாலிட்டி, டெலிகாம் மற்றும் மெட்டல் துறை பங்குகள் நல்ல லாபத்தினை அளித்துள்ளன.

லாபம் அளித்த நிறுவனங்கள்

லாபம் அளித்த நிறுவனங்கள்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், யெஸ் வங்கி, கோல் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, விப்ரோ, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவன பங்குகள் லாபத்தினை அளித்தன. டிசிஎஸ் நிறுவனத்தின் முதலாம் காலாண்டு அறிக்கை இன்று வெளியிடப்பட இருக்கும் நிலையில் 10.65 புள்ளிகள் என 0.56 சதவீதம் சரிந்துள்ளது.

நட்டம் அளித்த நிறுவனங்கள்

நட்டம் அளித்த நிறுவனங்கள்

இண்டஸ் இண்ட் வங்கி, கோடாக் வங்கி, சன் பார்மா, ஹீரோ மோட்டொ கார்ப், டிசிஎஸ் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் பங்குகள் நட்டம் அளித்துள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+