இந்திய பங்கு சந்தைகள் சமீபத்திய வாரங்களாகவே அன்னிய முதலீடுகள் திரும்ப தொடங்கியுள்ள நிலையில், வலுவான நிலையில் காணப்படுகின்றது. குறிப்பாக இன்று சென்செக்ஸ் 4 மாதங்களில் முதல் முறையாக 60,000 புள்ளிகளை தொட்டுள்ளது.
தற்போது 1.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 383.54 புள்ளிகள் அதிகரித்து, 60,225.75 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 110.15 புள்ளிகள் அதிகரித்து, 17,935.40 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
குறிப்பாக ஐடி துறை பங்குகள், மின்சார துறை, எஃப் எம், சி ஜி துறை, பொதுத்துறை நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
என்ன காரணம்>?
தொடர்ந்து இரண்டாவது அமர்வாக ஏற்றத்தில் காணப்படும் இந்திய பங்கு சந்தையானது, ஏப்ரல் 5க்கு பிறகு முதல் முறையாக 60,000 புள்ளிகளை தாண்டியுள்ளது.
இது சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி விகிதமானது மெதுவான வளர்ச்சி விகிதத்தினை காணலாம் என்ற பயத்தின் மத்தியில், இந்திய சந்தையில் முதலீடுகள் குவிந்து வருகின்றன.
சர்வதேச சந்தைகள்
சர்வதேச சந்தைகள் பெரியளவில் மாற்றமின்றி தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், இந்திய பங்கு சந்தையானது ஏற்றத்தில் காணப்படுகின்றது. குறிப்பாக ஆசிய சந்தைகள் பலவும் ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன. ஜப்பானின் சந்தையும் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. சீன சந்தையும் சற்று சரிவில் காணப்படுகின்றது. அமெரிக்காவின் பங்கு சந்தைகளும் கடந்த அமர்வில் சற்று சரிவிலேயே காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி ஆட்டோ தவிர மற்ற அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள பஜாஜ் பின்செர்வ், பஜாஜ் பைனான்ஸ், ஹெச் டி எஃப் சி லைஃப், ஹிண்டால்கோ, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே எம் & எம், அல்ட்ராடெக் சிமெண்ட், சிப்லா, பஜாஜ் ஆட்டோ, கோல் இந்தியா உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஜாஜ் பின்செர்வ், பஜாஜ் பைனான்ஸ், பார்தி ஏர்டெல், என் டி பி சி, ஹெச் சி எல் டெக் உள்ளிட்ட பங்குகள் மட்டுமே டாப் கெயினராகவும், இதே போல எம் & எம்,அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி சுசுகி, டைட்டன் நிறுவனம், கோடக் மகேந்திரா உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications