புதன்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு காலை வர்த்தகம் துவங்கும் முதலே சிறப்பான உயர்வுடன் துவங்கி 4வது வர்த்தக நாளின் உயர்வுக்கு வலிமையான அடித்தளமிட்டது. இந்த நிலையில் இன்று வர்த்தகம் முடியும் நேரத்தில் ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் சென்செக்ஸ் குறியீடு தடாலடியாக உயர்ந்து முதலீட்டாளர்களை குஷிப்படுத்தியது.
அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகியவை தங்களது நாணய கொள்கையில் வட்டி விகிதத்தை உயர்த்தாது என பெருவாரியான கணிப்புகள் வெளியாகியிருக்கும் வேளையில் பங்குசந்தையில் முதலீடுகள் குவிந்துள்ளது. இதன் வெளிப்பாடாகவே ஐரோப்பிய சந்தை துவக்கத்திற்கு பின்பு இந்திய சந்தையில் அதிகப்படியான முதலீடுகள் குவிந்துள்ளது.

மேலும் தற்போதைய சந்தை கணிப்புகள் உறுதியாகும் பட்சத்தில் வியாழக்கிழமை வர்த்தகமும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வாயிலாக நாளை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வரலாற்று உச்ச அளவீட்டை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 350.08 புள்ளிகள் உயர்ந்து 63,142.96 புள்ளிகளை எட்டியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக 63,196 புள்ளிகளை எட்டினாலும் வரலாற்று உச்ச அளவான 63,583.07 புள்ளிகளை அடைய முடியவில்லை.
இன்றைய வர்த்தகத்தில் கன்ஸ்யூமர் குட்ஸ், மெட்டல், ரியல் எஸ்டேட், எனர்ஜி, பொத்துறை வங்கி பங்குகள் சர்வதேச சந்தைகளின் நிலவரத்தின் வாயிலாக அதிகப்படியான முதலீடுகள் உயர்வுடன் இருந்தது. இதோடு ப்ளூ சிப் நிஃப்டி குறியீடு 0.68 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது, இன்றைய வர்த்தகத்தில் 13 துறைகள் உயர்வுடன் உள்ளது.
இதேபோல் நிஃப்டி குறியீடு 127.40 புள்ளிகள் உயர்ந்து 18,726.40 புள்ளிகளை எட்டியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் FMCG, மெட்டல், ரியல் எஸ்டேட், ஆயில் அண்ட் கேஸ் நிஃப்டி குறியீடுகள் 1 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் சந்தை மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து, முதலீட்டு மதிப்பை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications