சென்னை: மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று புதிய வரலாற்று உச்சத்தை தொட்டது. தனியார் வங்கி பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்கிய காரணத்தால், பங்குச்சந்தை குறியீடுகள் புதிய உச்சத்தை தொட்டன.
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்றைய வர்த்தக முடிவில் 409 புள்ளிகள் (0.55%) உயர்ந்து 74,086 புள்ளிகளை அடைந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 50 குறியீடு 118 புள்ளிகள் (0.53%) உயர்ந்து 22,474 புள்ளிகளில் முடிந்தன. மார்ச் 6ஆம் தேதி வர்த்தகத்தில் அதிகப்படியாக சென்செக்ஸ் 74151.27 புள்ளிகளை தொட்டது.

மார்ச் 6 வர்த்தகம்: மதிய வர்த்தகம் வரையில் சரிவுடன் காணப்பட்ட சந்தை 1.30-க்கு மேல் தடாலடியாக உயர துவங்கியது, இதற்கு முக்கியமான காரணம் தனியார் வங்கி பங்குகள் மீதான முதலீடுகள் தான்.
மிட்கேப், பேங்க் நிஃப்டி: ஆனால், மிட்கேப் குறியீடு 0.5 சதவீதம் குறைந்து 48,857 புள்ளிகளில் முடிந்தது. மேலும் வங்கி துறை குறியீடான பேங்க் நிஃப்டி 384 புள்ளிகள் உயர்ந்து 47,965 புள்ளிகளை எட்டியது.
வங்கி பங்குகளின் ஏற்றம்: நிஃப்டி 50 குறியீட்டில் இன்று அதிகம் லாபம் ஈட்டிய பங்குகளில் வங்கி பங்குகள் முன்னிலையில் உள்ளது. கோடக் மஹிந்திரா வங்கி பங்கு 2.7% உயர்ந்தது, அதனைத் தொடர்ந்து ஆக்சிஸ் வங்கி 2.4%, ஐசிஐசிஐ வங்கி பங்குகள் 1.7% உயர்ந்தன.
ஆர்பிஐ அதிரடி: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) IIFL ஃபைனான்ஸ் மற்றும் ஜேஎம் ஃபைனான்சியல் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜேஎம் ஃபைனான்சியல் ப்ரொடக்ட்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து, முதலீட்டாளர்கள் வங்கி பிரிவில் NBFC நிறுவனங்களை விட ரிஸ்க் குறைவான நிலையான வங்கி பங்குகளை முதலீடு செய்யத் தேர்வு செய்தன.
கடன் நிறுவனங்களின் சரிவு: ரிசர்வ் வங்கி இரண்டு நிறுவனங்களான IIFL ஃபைனான்ஸ் மற்றும் JM ஃபைனான்சியலின் துணை நிறுவனமான JM ஃபைனான்சியல் ப்ராடக்ட்ஸ் ஆகியவற்றுக்குக் கட்டுப்பாடுகளை விதித்ததைத் தொடர்ந்து, NBFC நிறுவனங்களின் பங்குகள் இன்று சரிந்தன.
2 முக்கிய நிறுவனங்கள்: ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் 10% சரிந்து ஒரு மாத குறைவான ரூ.172.80, எல்&டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் தலா இரண்டு மாத குறைவான 10% சரிந்து ரூ.155 இல் முடிந்தன. இதன் வாயிலாக இன்று நிஃப்டி 200 குறியீட்டில் அதிகம் சரிவை எதிர்கொண்ட பங்குகளாக இருந்தன.
மணப்புரம் ஃபைனான்ஸ்: இதேபோல், மணப்புரம் ஃபைனான்ஸ் பங்கு 9.5% சரிந்து ஒரு மாத சரிவையும், கேப்ரி குளோபல் கேப்பிட்டல் பங்கு 8.5% சரிவையும் கண்டன. JM ஃபைனான்சியல் மற்றும் IIFL ஃபைனான்ஸ் பங்குகள் இன்று தலா 20% சரிந்து, நிஃப்டி 500 குறியீட்டில் அதிகம் பாதிக்கப்பட்ட பங்குகளாக மாறின.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications