புது நிதியாண்டின் முதல் நாளிலேயே இப்படியா.. சென்செக்ஸ் 1203 புள்ளிகள் அவுட்.. நல்ல சகுனம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு நிதியாண்டின் முதல் நாளான இன்று பெரும்பாலான நிறுவனங்கள் முடக்கம், அத்தியாவசியம் தவிர அனைத்து உற்பத்தி ஆலைகளும் முடக்கம். ஏன் இந்தியா முழுவதும் முடங்கியுள்ளது.

இந்த நிலையில் இந்திய பங்கு சந்தையும் முடங்கியுள்ளது பெரிய விஷயம் ஒன்று அல்ல தான். எனினும் நிதியாண்டின் முதல் நாளிலேயே இப்படி தொடங்கியிருக்கிறதே என்ற கவலையும் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது எனலாம்.

பலத்த அடி வாங்கப்போகும் இந்தியா.. நம்பிக்கையிழந்த முதலீட்டாளர்கள்.. தடதடவென சரியும் சந்தை..!

சந்தை வீழ்ச்சி
 

சந்தை வீழ்ச்சி

இன்று காலை தொடக்கத்திலேயே சரிவுடன் தொடங்கி இந்திய பங்கு சந்தையானது முடிவிலும் சரிவிலேயே முடிவடைந்துள்ளது. மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 1,203 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 28,265 ஆக முடிவடைந்துள்ளது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 343 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 8253 ஆக முடிவடைந்துள்ளது.

இதுவும் ஒரு காரணம்

இதுவும் ஒரு காரணம்

இதற்கு என்ன காரணம் முதல் நாளே இந்த அளவு வீழ்ச்சி கண்டுள்ளதே. இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் படபடவென அதிகரித்து வருகின்றன. இதனால் இதன் தாக்கம் எந்த அளவுக்கு பொருளாதாரத்தில் எதிரொலிக்குமோ என்ற பயம் முதலீட்டாளார்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுவும் சந்தையின் அழுத்தத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

மாற்ற முடியாத கடனீடுகள்

மாற்ற முடியாத கடனீடுகள்

இதே சர்வதேச சந்தைகளின் அழுத்தம் இந்திய சந்தையில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. அதோடு கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கிய மாற்ற முடியாத கடனீடுகள் (NCDs) 60,000 கோடிக்கும் அதிகமான வட்டி மற்றும் அசல் அடுத்த மாதத்தில் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளன. இது சந்தையில் சரிவுக்கு மேலும் வழிவகுத்தது எனலாம்.

அதிகளவில் வெளியேறும் முதலீடு
 

அதிகளவில் வெளியேறும் முதலீடு

இதோடு அன்னிய நேரடி முதலீடுகள் மற்றும் அன்னிய போர்ட்போலியோ முதலீடுகள் அதிகளவில் வெளியேறி வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 1.2 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் சந்தையில் இருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. இது தவிர வாகன விற்பனை சரிவால் வாகன பங்குகள் வீழ்ச்சி என வீழ்ச்சி கண்டுள்ளன.

அனைத்து குறியீடுகளும் வீழ்ச்சி

அனைத்து குறியீடுகளும் வீழ்ச்சி

நிஃப்டி ஆட்டோ குறியீடு 1.73% வீழ்ச்சியுடனும், இதே பேங்க் நிஃப்டி 5% வீழ்ச்சியுடனும், எஸ்& பி BSE மிட் கேப் குறியீடு 2% சரிவுடனும், இதனுடன் எஸ்& பி BSE ஸ்மால் கேப் குறியீடு படு வீழ்ச்சியுடனும் வீழ்ச்சி கண்டுள்ளது. இதனுடன் நிஃப்டி ஐடி 5.62% மும், பிஎஸ்இ டெக் 5.51% வீழ்ச்சியுடனும், பிஎஸ்இ மெட்டல்ஸ் 2.20% சரிவுடனும் காணப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex declines 1203 points in the first day of new financial year

Sensex lost 1,203 points or over 4 per cent to end at 28,265 Nifty ended at 8,254, down 344 points or 4 per cent.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X